ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தின் முன்னேற்றத்திற்குக் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, கல்வி மேம்பாட்டுக்கு மாநில அரசாங்கம் சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது.

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜெக்தீப் சிங் தியோ.
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜெக்தீப் சிங் தியோ அலுவலகத்திற்கு மரியாதை நிமிதாக வருகையளித்த சென்னையைச் சேர்ந்த சாய்ராம் குழும தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அருண் அவர்களை வரவேற்றார்.
“தொழில்துறையில், பினாங்கில் 450 பன்னாட்டு நிறுவனங்களும் (MNCs), 7,000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் (SMEs) செயல்பட்டு வருகின்றன. இந்த வளர்ச்சி, பினாங்கை உலக நாடுகளை வரவேற்கும் முக்கிய தொழில்துறை மையமாக உருமாறியுள்ளது.

“இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய அடிப்படை நமது உலகத்தரம் வாய்ந்த மற்றும் திறமைமிக்க மனிதவளமே ஆகும். தொழிற்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனுடைய தொழிலாளர்களை உருவாக்கும் கல்வியமைப்பே, பினாங்கின் நீடித்த முன்னேற்றத்திற்கு துணைபுரிகிறது,” என்று ஜெக்தீப் சிங் தியோ தெரிவித்தார்.
இந்தியா நாட்டு உடனான
எங்கள் ஒத்துழைப்பு, உள்ளூர் மாணவர்களுக்குக் கல்வித்துறையில் பெரும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் கல்வியின்றி எங்கள் இலக்குகளை அடைய முடியாது, என்று ஜெக்தீப் விளக்கமளித்தார்.
சாய்ராம் குழுமத்தின் கீழ் சென்னை மற்றும் பெங்களூரில் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுவருவதாக அறியப்படுகிறது.
எதிர்காலத்தில் மாநில அரசுடன் இணைந்து பல கல்வி சார்ந்த திட்டங்களில் செயல்பட இணக்கம் கொண்டுள்ளதாகவும் அதன்
தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அருண் தெரிவித்தார்.
சாய்ராம் குழும தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அருண், இரண்டாம் துணை முதலமைச்சர் ஜெக்தீப் சிங் அவர்களுக்குப் பொன்னாடைப் போற்றி, மாலை அணிவித்து, திருவள்ளுவர் சிலையைப் பரிசாக வழங்கினார்.