முத்தியாரா வீடமைப்புத் திட்டத்திற்கான காத்திருப்பு காலம் குறைப்பு

Admin
img 20251119 wa0048

ஜார்ச்டவுன் – மாநில அரசு, விண்ணப்பம் புதுப்பிக்கப்பட்ட தேதியைத் தொடர்ந்து, முத்தியாரா வீடமைப்புத் (RMku) திட்டத்தில் வீடுகள் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தை 3 முதல் 6 மாதங்களுக்குக் குறைக்க முன்முயற்சி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோஸ்ரீ சுந்தரராஜூ கூறுகையில், மாநில அரசு, LPNPP மூலம் வீட்டுவசதி தகவல் அமைப்பில் (SMP) உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தரவு புதுப்பிப்பு செயல்முறையை செயல்படுத்தியுள்ளது.

“இதில் முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், குறிப்பாக தற்போதைய வீட்டு வருமான வரம்பின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, இன்றுவரை LPNPP வீட்டுவசதி தகவல் அமைப்பில் (SMP) மொத்த காத்திருப்புப் பட்டியல் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 6,249 மட்டுமே.

இது வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் LPNPP ஆகியவற்றின் தலைமையின் மூலம் மாநில அரசின் முன்முயற்சி மற்றும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது, என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் (DUN) மூன்றாவது தவணையின் இரண்டாவது கூட்டத்தில், வாய்மொழி கேள்வி அமர்வு இவ்வாறு கூறினார்.

“புதுப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்கள் செயலற்ற விண்ணப்பதாரர்களாக வகைப்படுத்தப்படுவார்கள், மேலும் சலுகைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். இது விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் குறைத்து காத்திருப்பு நேரத்தைக் குறைக்கலாம், என்றார்.

மேலும், இன்னும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பம் செயலில் இருக்க அனைத்து தற்போதைய தரவையும் புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தால் (LPNPP) 2025, அக்டோபர் வரை புதுப்பிக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில், 2020 முதல் கட்டி முடிக்கப்பட்ட முத்தியாரா வீடு வகை ‘ஏ’ (RMKu A) மற்றும் வகை ‘பி’ (RMKu B) ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 8,567 ஆகும். இதில் ‘ஏ’ வகை வீடுகள்
3,420 யூனிட்கள், ‘பி’ வகை வீடுகள்
5,147 யூனிட்கள் கட்டப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக, வடகிழக்கு மாவட்டத்தில் ‘பி’ வகை வீடுகள் 1,234 உள்ளன; தென்மேற்கு மாவட்டத்தில் ‘ஏ’ வகை வீடுகள் 1,290 மற்றும் ‘பி’ வகை வீடுகள் 303 உள்ளன; வட செபராங் பிறையில் ‘ஏ’ வகை வீடுகள் 353 மற்றும் ‘பி’ வகை வீடுகள் 3,610 உள்ளன; மத்திய செபராங் பிறையில் ‘ஏ’ வகை வீடுகள் 954 மற்றும் தெற்கு செபராங் பிறையில் 823 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, என்று பினாங் துங்கால் சட்டமன்ற உறுப்பினர்
புகாரி பின் கசாலி கேட்ட வாய்மொழிக் கேள்விக்கு டத்தோ ஸ்ரீ சுந்தராஜு இவ்வாறு பதிலளித்தார்.