பினாங்கில் திருமுறை விழாவில் தேசப்பற்றுடன் தேசியக்கொடி விநியோகம்

Admin
fb img 1755505397526

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அளவிலான திருமுறை ஓதும் விழா ஸ்காட்லாந்து சாலையில் உள்ள இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆகஸ்ட்,31 அன்று நடைபெறவிருக்கும் தேசிய தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து தேசியக் கொடியை விநியோகிக்கும் நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றது.

fb img 1755505402703

மலேசிய இந்து சங்கம் பினாங்கு பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருமுறை ஓதுவதன் மூலம் இளைய தலைமுறையினரிடையே ஆன்மீக விழுமியங்கள், ஒழுக்கம் மற்றும் கலாச்சாரப் பெருமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்கு ஆதரவாக ரிம50,000 நிதியுதவி வழங்கினார். மேலும், பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் ரிம5,000 நிதியுதவி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தேசியக் கொடி வழங்கப்பட்டது, அது மண்டபத்தையே தேசபக்தியால் நிரப்பியது. அதே நேரத்தில் திருமுறை பாராயணமும் பக்தி மற்றும் சுதந்திர உணர்வோடு படைக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரம் பாதுகாக்கப்படுவதாக இந்து சமூகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராயர் உறுதியளித்தார்.

“மலேசியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் பராமரிக்கப்படுகிறது. மேலும் அனைத்து சமூகங்களின் சுதந்திரங்களையும் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் நமது கடமையாகும்,” என்று அவர் கூறினார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பின்னால் உள்ள தலைவர்கள் மற்றும் பொது மக்களின் தியாகங்களை PHEB துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டினார்.

“தேசியக் கொடி வெறும் கொடி மட்டுமல்ல, ஒற்றுமை மற்றும் தியாகத்தின் புனித சின்னம்,” என்று அவர் கூறினார்.

“நமது நாட்டு சுதந்திரம், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்து நின்ற நமது தாத்தா, பாட்டி மற்றும் முன்னோர்களின் போராட்டங்கள் மூலம் வென்றது. தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதன் மூலமும், இணக்கமான எதிர்காலத்தை உறுதி செய்வதன் மூலமும் நாம் அந்த மரபை மதிக்க வேண்டும்.”

இந்த நிகழ்ச்சி, மலேசிய இந்து சங்கம் பினாங்கு பேரவை, இந்து மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைப் பெரும் அளவில் ஊக்குவிப்பதற்காக மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

இதுபோன்ற முயற்சிகள், தேசிய அடையாள உணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், இந்து சமய மரபுகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதாக பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.

இந்தக் கொண்டாட்டம், நம்பிக்கை மற்றும் தேசபக்தியின் தனித்துவமான கலவை என்றும், மலேசியாவின் ஒற்றுமை, மரியாதை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் மதிப்புகளைப் பிரதிபலிக்கும் என்பது வெள்ளிடைமலை