செபராங் பிறை நகராண்மைக் கழகம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

செபராங் பிறை நகராண்மைக் கழகம்
செபராங் பிறை நகராண்மைக் கழகம்

செபராங் பிறை நகராண்மைக் கழகம் தனது சிறந்த மற்றும் தரமான சேவையை அங்கீகரிக்கும் வகையில் மலேசிய சாதனை புத்தகம் இரண்டாவது முறையாக அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளது. மலேசியாவில் தொடர்ந்தாற்போல ஆறு நற்சான்றிதழ் பெற்ற ஒரே ஊராட்சி மன்றமாக செபராங் பிறை நகராண்மைக் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டக்குறியது என எக்சோரா தங்கும்விடுதியில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
தர மேலாண்மை அமைப்பு சான்றிதழ் அடிப்படையில் வழங்கப்பட்ட இச்சான்றிதழ் செபராங் பிறை நகராண்மைக் கழக ஊழியர்கள் பணியை செவ்வன ஆற்றவும் வாடிக்கையாளரின் தேவைகேற்ப சேவையை வழங்கவும் சுற்றுசூழல் நிர்வாகிப்பு செலவினைத்தை குறைத்தல், சுற்றுசூழலை பாதுகாத்தல் போன்ற வேலைகளை நடைமுறைப்படுத்த இச்சான்றிதழ் ஊந்துகோலாக அமையும் என்பது திண்ணம் என வரவேற்பு உரையில் குறிப்பிட்டார் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப்.
செபராங் பிறை நகராண்மைக் கழகம் தரமான நிர்வாகிப்பு அமைப்பு ISO 9001:2008 (QMS), சுற்றுசூழல் நிர்வாகிப்பு அமைப்பு ISO140001:2004 (EMS),பாதுகாப்பு நிர்வாகிப்பு மற்றும் தொழிலியல் பாதுகாப்பு அமைப்பு OHSAS 18001:2007, சக்தி நிர்வாக அமைப்பு ISO 50001:2011 (EnMS), சுற்றுப்புற சுகாதார நிர்வாகிப்பு அமைப்பு 5S (QEMS), மற்றும் ISO/IEC 27001:2013 ஆகிய ஆறு நற்சான்றிதழை பெற்றுள்ளன. அடுத்ததாக, சொத்துடமை நிர்வாக அமைப்பு (ISO 55001) சான்றிதழை பெற செபராங் பிறை நகராண்மைக் கழகம் இலக்கு கொண்டுள்ளது என செய்தியாளர் சந்திப்பில் மைமுனா அறிவித்தார். அதற்கான ஆயுத்த பணிகளில் கழக ஊழியர்கள் முழுமூச்சாக இறங்கியுள்ளனர் என்றார்.
படம் 1: மலேசிய சாதனை புத்தக சான்றிதழை அதன் தலைமை நிர்வாக அதிகாரி செபராங் பிறை நகராண்மைக் கழகத்திடம் வழங்குகிறார்.(உடன் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி)if (document.currentScript) {