பாகான் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு ரிம484,000 நிதி ஒதுக்கீடு

Admin
ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள்.

பினாங்கு மாநில அரசு 2011-ஆம் ஆண்டு முதல் பாகான் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவியாக ரிம484,000 ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

சமூகநலன் மிக்க மாநில அரசின் ஆட்சியில் மாணவர்கள் கல்விகேள்வியில் சிறந்து விளங்க பல ஊக்கத்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும் .

பினாங்கு வாழ் அனைத்து இன மக்களும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை மற்றும் சன்மானம் பெற்று பயன்பெற வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்களான லிம் ஹொக் செங், பீ புன் போ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தனசேகரன் கலந்து கொண்டனர்.

மாநில முதல்வருடன் அரசியல் தலைவர்களும் இணைந்து பாகான் நாடாளுமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வசதி குறைந்த 660 ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கும் தலா ரிம100 ஊக்கத்தொகையாக வழங்கினர். இத்திட்டத்திற்கு ரிம66,000 நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டது.

மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த விளங்குவதற்கு கல்வியே ஆணிவேராகத் திகழ்கிறது. அதோடு நிபுணத்துவமிக்க துறையில் கால் தடம் பதிப்பதற்கு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து தேர்ச்சிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற வேண்டும்என மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான அறிவுரை வழங்கினார்.

மாநில அரசு தங்கத்திட்டத்தின் மூலம் ஒன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் ஒன்றாம் மற்றும் நான்காம் படிவம் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக ரிம100 கொடுக்கப்படுகிறது. .

தொடர்ந்து அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு ரிம1000 சன்மானமாக வழங்கப்படும் என கூறினார் .