பினாங்கு காற்பந்து சங்கத்திற்குக் கூடுதல் ரிம4மில்லியன்

படம்:  3 புதிய வெளிநாட்டு விளையாட்டாளர்களுடன் பயிற்றுநர் ஜெக்சன் தியகோ
படம்: 3 புதிய வெளிநாட்டு விளையாட்டாளர்களுடன் பயிற்றுநர் ஜெக்சன் தியகோ

பினாங்கு நீர் விநியோக நிறுவனம் 2015-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் லீகா பெர்டானா காற்பந்து போட்டியில் வெற்றிப் பெறும் பொருட்டு பினாங்கு காற்பந்து சங்கத்திற்கு ரிம 4மில்லியன் வழங்கியது.

பினாங்கு காற்பந்து குழுவை வலுவடையச் செய்ய லீகா சூப்பர் மற்றும் லீகா பெர்டானா போட்டியில் விளையாடுவதற்கு 4 புதிய வெளிநாட்டு விளையாட்டாளர்களை அறிமுகம் செய்தார் பினாங்கு காற்பந்து சங்கத் தலைவர் டத்தோ ஶ்ரீ நசீர் அரிப் முசீர். அவர்கள் முறையே லீ கில் ஹுன் (தென் கொரியா), ஹில்டன் மௌரா மோரேய்ரா, அல்பெர்தோ கொன்கால்வ் டா கொஸ்தா, ரேநால்டோ ரோட்ரிக்கூஸ் (பிரசில்) ஆகியோர் ஆவர் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

மேலும், செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முதல்வர் இம்முறை வெற்றி பெறுவதற்கான அனைத்து வசதிகளும் விளையாட்டாளர்களுக்கு வழங்கியுள்ளதை வலியுறுத்தினார். விளையாட்டாளர்கள் வெற்றி பெறுவதற்கு முழு மூச்சுடன் ஈடுப்பட வேண்டும் எனக் கேட்டு கொண்டார். மேலும், புதிய பினாங்கு காற்பந்து பயிற்றுநரான ஜெக்சன் தியகோ பயிற்சி முறைகளை துரிதப்படுத்தவுள்ளதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் கொடிமலை ஆட்சிக்குழு உறுப்பினர் கீர் ஜொஹாரி கலந்து கொண்டு சிறப்பித்தார். காற்பந்து சங்கத்திற்கு வழங்கப்படும் ரிம 4 மில்லியன் ஊக்கத்தொகையானது காற்பந்து வீரர்களுக்குத் தூண்டுகோலாகவும் அடுத்து பருவத்தில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தவும் துணைபுரியும் என முதல்வர் தெரிவித்தார்.

2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிற மாநிலங்களுடனும் நட்பு ஆட்டங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. பினாங்கு காற்பந்து குழுவினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி மகுடம் சூட வேண்டும் என்றார் மாநில முதல்வர். பினாங்கு மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);