21ஆம் நூற்றாண்டு வகுப்பறை அறிமுகம் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு வழிகாட்டி – முதல்வர்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு ரிம100,000 மானியம் வழங்கினார்
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு ரிம100,000 மானியம் வழங்கினார்

பினாங்கு மாநில அரசு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு வழங்கி வரும் நிதியுதவி இன்று 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை தொடக்க விழாவிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறையின் கற்றல் கற்பித்தல் உதவ மடிக்கணினிகள், மல்டிமீடியா கற்பித்தல் கருவிகள் மற்றும் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டது பினாங்கில் முதல் பள்ளியாகவும் மாணவர்களுக்கு சிறந்த கற்றலாகவும் திகழ்கிறது
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வகுப்பறையை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து 28 தமிழ்ப்பள்ளிகளிலும் இது போன்ற தொழில் நுட்பம் சார்ந்த வகுப்பறை அமைக்க இலக்கு கொண்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அறிவித்தார்.
2009-ஆம் ஆண்டு முதல் மாநில அரசு அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம12,250,000 நிதி ஒதுக்கீடு வழங்கிய வேளையில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு மட்டும் ரிம1.2 லட்சம் வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது. நிறைவு விழாவில் மாநில முதல்வர் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டுக்குக் கூடுதலாக ரிம100,000-கான காலோசையை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரிடம் வழங்கினார். பினாங்கில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளிலே 885 மாணவர்கள் கொண்ட பெரிய பள்ளி மற்றும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி அடைவுநிலை பெறும் பள்ளி என புகழாறம் சூட்டினார் முதல்வர் குவான் எங்.

21ஆம் நூற்றாண்டு வகுப்பறையில் கல்வி கற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
21ஆம் நூற்றாண்டு வகுப்பறையில் கல்வி கற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

பினாங்கில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளிலே 161 பாலர்ப்பள்ளி மாணவர்கள் கொண்டு முதல் இடத்தில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி இடம்பெறுகிறது. பாலர்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையே எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கூடுதல் எண்ணிக்கைக்கு ஆணிவேராக அமைகிறது என தொடக்க விழாவில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.
“மாநில அரசாங்கம் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு நில ஒதுக்கீடு செய்துள்ளது, எனவே மத்திய அரசாங்க ஒப்புதல் வழங்க முன் வர வேண்டும். தமிழ் இடைநிலைப்பள்ளியின் உருவாக்கம் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு ஊன்றுகோளாகத் திகழும்” என மேலும் தெரிவித்தார்.