அனைத்துலக மகளிர் தினம் பெண்களின் சமத்துவத்தைப் பிரதிபலிக்கிறது

Admin

 

அனைத்துலக மகளிர் தினம்
வீட்டிலிருக்கும் தாய்மார்கள் முதல் வணிகத் துறையில் வெற்றி நடைப்போடும் தலைவர்கள் வரை அனைவரின் சமத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டத்தின் நோக்கம் மிகவும் எளிமை மற்றும் அர்த்தம் மிக்கதாகும்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் நடக்கும் வேளையில், பினாங்கு மாநில அரசு சமூகத்தில் பெண்களுக்கு நன்றியும் பாராட்டையும் காட்டும் நிலைப்பாட்டில் உறுதிக்கொண்டுள்ளது

சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத அலுவல்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்  சொங் எங், இந்த ஆண்டின் கருப்பொருளான ‘சவாலைத் தேர்வுச்செய்க’ என்பது தற்போதைய மருத்துவ நெருக்கடிக்கு எதிரான நமது போரில் சரியாகப் பொருந்தக்கூடியது என்று கூறினார்.

“நம் சமூகத்தில் உள்ள பெண்கள் தங்களுக்கென  மாறுதலை  மேம்படுத்தும் திறன் கொண்டவர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பம், நண்பர்கள், சக தொழிலாளர்கள் மற்றும் தினசரி அடிப்படையில் அவர்கள் சந்திக்கும் அனைவருக்கும் சவால் மிக்கவராக அமைவர்.

“பினாங்கு மாநில அரசு கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் இம்மாநிலத்தில் பெண்களின் பங்களிப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பதை அறிய முடிகிறது.

” பினாங்கு மாநில சட்டமன்றத்தில் மகளிர் பிரதிநிதி அதிகரிக்க ‘பெண்களுக்கான கூடுதல் இட ஒதுக்கீடு’; பினாங்கு மகளிர் மன்றம் 2020; பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழு  மற்றும் பல திட்டங்களை தொடங்கியுள்ளோம்,” என ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் அனைத்துலக மகளிர் தின கொண்டாட்டத்தின்
‘சூம்’ சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங்

மார்ச் மாத இறுதி வரை ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த பிரச்சாரத்தில் இயல்கலை வாயிலாக பல நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும், சொங் எங் மேலும் கூறினார்.

“தற்போது #MemilihUntukCabar எனும் காணொலி போட்டி இடம்பெறுகிறது.

“இந்தப் போட்டி, வேலைச் செய்யும் மற்றும் வேலைச் செய்யாத பெண்கள் தங்கள் வாழ்க்கையின் சவால்களை எதிர்நோக்க அனுபவித்தப் பங்களிப்பு மற்றும் தியாகங்கள்  வெளிப்படுத்த ஒரு தளமாக விளங்குகிறது, ” என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்துலக மகளிர் தினம் மார்ச்,8 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.

இதனிடையே, சமூகத்தில் பெண்களைக் கொண்டாடும் இந்த தினத்தை ஒரு சிறிய அளவிலான விழாவாக வருகின்ற மார்ச்,27-ஆம் தேதி ‘தெ லைட்’ தங்கும் விடுதியில் நடைபெறும் என்றும் சொங் எங் மேலும் கூறினார்.

“இந்நிகழ்ச்சியில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்; கிராம சமூக செயல்முறை கழக (எம்.பி.கே.கே) உறுப்பினர்கள்; பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (பி.டபிள்யூ.டி.சி) உறுப்பினர்கள்; மற்றும் போட்டி வெற்றியாளர்கள் மற்றும் பலர் அடங்குவர்,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்றைய இணையதள பத்திரிகையாளர் சந்திப்பின் போது பி.டபிள்யூ.டி.சி தலைமை நிர்வாக அதிகாரி ஓங் பீ லெங் கலந்து கொண்டார்.

பிரச்சாரம் மற்றும் போட்டிகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் முகநூல்
https://www.facebook.com/PWDCMalaysia
வலைத்தளத்தில் வலம் வரலாம்.