அரசு ஊழியர்களுக்கு மலிவு விலை வீடுகள் வழங்கப்பட்டது – ஜெக்டிப்

Admin
மலிவு விலை வீடுகளுக்கான ஒப்புதல் கடிதம் பெற்றுக்கொண்ட அரசு ஊழியர்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ.

பினாங்கு மாநில அரசு மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் கடப்பாட்டை கொண்டுள்ளது. இதன் முன்னுரிமை பினாங்கு மாநிலத்தில்

கூட்டரசு அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஒரே மலேசியா பொதுத்துறை வீடமைப்புத் திட்டம் பினாங்கில் அமைக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ.

மத்திய அரசு பொதுத்துறை வீடமைப்புத் திட்டத்தை பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்த விண்ணப்பித்துள்ளது.

எனினும், மாநில அரசு கடல் மட்டத்தில் இருந்து 76 மீட்டர் உயரத்தில் கட்டடம் அமைக்க முடியாது என நிர்ணயித்துள்ள கோட்பாட்டை மீறிய காரணத்தால் மத்திய அரசின் அவ்விண்ணப்பத்தை நிராகரித்ததாகக் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர் .

2013-ஆம் ஆண்டு தொடங்கி 4,484 பொதுத்துறை ஊழியர்கள் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் (ரிம 42,000 – ரிம 400,000) விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1,310 அரசு ஊழியர் விண்ணப்பங்கள் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளன; சில விண்ணப்பங்கள் வங்கி கடனுதவி காரணமாக நிராகரிக்கப்பட்டன

வங்கி கடனுதவி தொடர்பாக கடந்தாண்டு அதிகமான வீடமைப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய வங்கிக்கும் பிரதமர் துறை அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பகோரி சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப்.