எஸ்பெனின் கூட்டு முயற்சியில் வெர்சா திட்டம் மெய்பிக்கும்

Admin
whatsapp image 2024 01 19 at 11.54.53 am

பத்து காவான் – எஸ்பென் குழுமம் வெர்சா எனும் இரண்டு-கோபுர குடியிருப்பு மேம்பாடு மற்றும் ஒன்பது வணிக யூனிட்களை இன்று பத்து காவானில் தொடங்கியுள்ளது.

இத்திட்டம் பத்து காவான் நகரத்தின் பிரதான இடத்தில் நிரந்தர குடியுரிமையைக் குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இணையற்ற வசதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை உறுதியளிக்கிறது.

பத்து காவான் IKEA, கிளிப்பா பேரங்காடி, முக்கிய விரைவுச்சாலைகள் மற்றும் தொழில்துறை மையங்கள் போன்ற வசதிகளுக்கான இலகுவான அணுகல், நன்கு இணைக்கப்பட்ட மற்றும் வளமான வாழ்க்கை அனுபவத்தை உறுதிசெய்கிறது.

இந்தப் புதிய திட்டத்தின் (வெர்சா) கீழ் அனைவரும் சொந்தமாக வீடு வாங்குவதை உறுதி செய்ய கூடுதலான விலை விதிக்கப்படவில்லை, என எஸ்பென் குழுமத்தின் தலைவரும், தலைமைச் செயல்முறை அதிகாரியுமான டத்தோ எம்.முரளி கூறினார்.

“இங்கு பத்து காவானில் எங்களின் 9வது திட்டமாக வெர்சா அமைகிறது, இதன் தொடக்க விலை ரிம370,000 ஆகும்.

“இந்த சிறந்த வடிவமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம், வீடு வாங்குநர்கள், முதலீட்டாளர்கள், வசதியான மற்றும் அதிநவீன வாழ்க்கை முறையைத் தேடும் தொழில் வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறந்த தளமாக திகழும்,” என்று பத்து காவான், வெர்சா திட்டத் திறப்பு விழாவின் போது முரளி தனது உரையில் இவ்வாறு கூறினார்.

வெர்சா என்பது எஸ்பென் மற்றும் இகானோ ரீடெய்ல், ஏ.வி.சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். இது இந்த தொலைநோக்கு நகர்ப்புற நிலப்பரப்பில் 4வது குடியிருப்பு மேம்பாட்டாக திகழ்கிறது.

முன்னதாக விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பத்து காவான் நிலப்பரப்பில் சிறந்த மேம்பாட்டுப் பங்களிப்பிற்காக எஸ்பென் மற்றும் இகானோ ரீடெய்ல் நிறுவனங்களைப் பாராடினார்.

“வெர்சாவின் திறப்பு விழா புதுமை மற்றும் சிறப்பின் கலங்கரை விளக்கமாக அமைகிறது, இது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சிறந்த சமூகங்களை வளர்ப்பதற்கும் மாநிலத்தின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும்.

இத்திட்டம், 247 ஏக்கர் நிலப்பரப்பளவில் எஸ்பென் விஷன் சிட்டியின் 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்படுகிறது.

இத்திட்டத்தில் முறையே பிளாக் ‘எ’ மற்றும் ‘பி’ என இரண்டு கட்டிடங்கள் இருக்கிறது. இரண்டு கட்டிடங்களிலும் உள்ள யூனிட்கள் ஒவ்வொன்றும் 703 சதுர அடி அளவில் உள்ளன.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, பிளாக் A-ல் 50 சதவீதத்திற்கும் மேல் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது.

img 20240119 wa0179

இந்த நிகழ்ச்சியில் மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ, மாநில உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் எங் மூய் லாய், எஸ்பென் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டத்தோஸ்ரீ நசீர் ஆரிஃப், செபராங் பிறை மாநகர் கழக தலைவர் மேயர் டத்தோ அசார் அர்ஷாத் மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத் (PDC) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அஜிஸ் பாக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.