கடமை தவறாத பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளுக்குச் சன்மானம்

கடமை தவறாத பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளுக்குச் சன்மானம் வழங்கினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . (உடன் முக்கிய பிரமுகர்கள்).
கடமை தவறாத பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளுக்குச் சன்மானம் வழங்கினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . (உடன் முக்கிய பிரமுகர்கள்).

பினாங்கு முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் கெர்னி கடற்கரை ஓரத்தில் வாடகைக் கார் ஓட்டுநர் சாலை விதியை முறையாக பின்பற்றாமல் கார் நிறுத்தியதால், அதனை தவறு என சுட்டிக்காட்டி சம்மன் வழங்கிய பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளை வாடகைக் கார் ஓட்டுநர் தாக்க முயன்றுள்ளார் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . அதுமட்டுமின்றி, அண்மையில் பாடாங் கோத்தாவில் அமைந்துள்ள சட்டவிரோதமான கடைகளை தகற்ற முயன்ற போது சம்மந்தப்பட்ட ஆடவர் பணியில் ஈடுப்பட்டிருந்த பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளை கத்தியைக் காட்டி மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரு சம்பவத்தின் போது பணியில் ஈடுப்பட்டிருந்த பினாங்கு மாநகர் கழகத்தை சேர்ந்த சுமார் ஒன்பது அதிகாரிகளின் துணிச்சல் செயலை அங்கீகரிக்கும் பொருட்டு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சன்மானம் வழங்கி பாராட்டினார். ஒவ்வொரு அதிகாரிக்கும் தத்தம் ரிம200 சன்மானமாக வழங்கப்பட்டது பாராட்டக்குரியதாகும். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் பொது மக்களின் இவ்விரு செயல்களும் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்ததாகத் தெளிவுப்படுத்தினார். எனினும், சில வேளைகளில் அவர்கள் பொதுமக்களால் பாதிக்கப்படுகின்றனர். முறையான சாலை விதிமுறைகளைப் பின்பற்றாத தரப்பினர் மீது கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சாடினார்.

செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு மாநகர் கழக அதிகாரிகள் தலைமை இயக்குநர் சலேவுடின் அசிம் அவர்களுடன் உரையாடினர்
செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு மாநகர் கழக அதிகாரிகள் தலைமை இயக்குநர் சலேவுடின் அசிம் அவர்களுடன் உரையாடினர்

இதனிடையே, பினாங்கு மாநகர் கழகத்தின் கடமையை செய்வதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு நல்கும். அதே வேளையில், அவர்கள் கடமையைச் செய்யத் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படுத்தினார். இம்மாதிரியான சம்பவங்கள் நிகழாமல் தவிர்ப்பதற்கு பொதுமக்கள் மாநகர் கழக விதிமுறையைப் பின்பற்றுவது அவசியமாகும். விதிமுறைகள் அனைத்தும் பொதுமக்களின் வசதிக்கே தவிர அவர்களை சிரமம் படுத்த அல்ல எனக் கூறினார் பினாங்கு மாநகர் கழக தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் தெரிவித்தார்.} else {