குடியுரிமையற்ற  மாணவர் கல்வி தொடர உதவிகள் வழங்கப்படுகிறது – பேராசிரியர்

Admin

ஜார்ச்டவுன் –  மாநில அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்  பினாங்கில் குடியுரிமைப் பிரச்சனையை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவும் பொருட்டு பினாங்கு மாநில குடியுரிமை திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டம் எனது கண்காணிப்பின் கீழ் ஐந்து அதிகாரிகள் தத்தம் பினாங்கு மாநில ஐந்து மாவட்டங்களிலும் பணிநிமித்தம் செய்யப்பட்டுள்ளதாக  இரண்டாம் தவணை சட்டமன்ற கூட்டத்தொடரில் புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் லீ சூன் கிட் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு இவ்வாறு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பதிலளித்தார்.

இந்த ஐந்து அதிகாரிகளும் குடியுரிமை அல்லாத மக்களுக்குப் பிறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்தல், அடையாள அட்டை பதிவு செய்தல், குடியுரிமை விண்ணப்பம், குடிநுழைவு துறை சார்ந்த விண்ணப்பம் மற்றும் இதர உதவிகள் பொதுமக்களுக்கு வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“இதனிடையே, இத்திட்டத்தின் கீழ் குடியுரிமையற்ற  மாணவர்கள் தங்களின் கல்வியை ஆரம்பப்பள்ளியில் தொடர உதவிகள் வழங்கி வருகிறது. அதேவேளையில்
அரசியலமைப்பு சட்டம் 15(A) கீழ்  பள்ளிகளில் பயிலும் 21 வயதுக்கு உட்பட்ட  குடியுரிமையற்ற மாணவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும்  உதவிக்கரம் நீட்டபடுகிறது என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பதிலளித்தார்.