டிங்கி காய்ச்சலின் ஆபாயத்தை உணர்வீர்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்  டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கினார்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கினார்.

இவ்வாண்டு 6-வது வாரத்தில் (7-13 பிப்ரவரி 2016) பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 107 டிங்கி காய்ச்சல் வழக்கு பதிவாகியுள்ளன. 2016-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 1,014 டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதாவது 106 வழக்குகள் (11.7%) கூடுதலாகப் பதிவாகியுள்ளன. இதுவரை டிங்கி காய்ச்சலால் ஒன்பது உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது வருத்தமளிக்கிறது. பினாங்கு வடக்கிழக்கு முத்தியாரா இடாமான், மத்திய செபராங் பிறையில் செம்பிலாங் அடுக்குமாடி மற்றும் தாமான் இன்பியான் ரியா, தென் செபராங் பிறையில் வால்டோர், தாமான் ஶ்ரீ அங்குஸ் அடுக்குமாடி, ஆகிய இடங்களில் டிங்கி காய்ச்சல் அதிகமாகப் பதிவாகியிருப்பதாக பினாங்கு மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, டிங்கி காய்ச்சலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு உதவித்தொகையும் வழங்கினார் மாநில முதல்வர். பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மை செய்வதோடு ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பொது மக்கள் குடியிருப்புப் பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர். சுகாதார துறையைச் சார்ந்த அதிகாரிகள் கொசு மருந்து அடிப்பதை வரவேற்க வேண்டும். மேலும், பொது மக்கள் டிங்கி காய்ச்சல் அறிகுறிகளான உடல் வலி, வாந்தி, ஏற்பட்டால் உடனடியாக அருகில் அமைந்திருக்கும் கிளினிக் அல்லது மருத்துவமனை அணுக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);