தீபாவளி பொருட்சந்தை 2016

மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி சிறப்புரையாற்றினார்

கடந்த அக்டோபர் 1-ஆம் திகதி சனிக்கிழமை அன்று , தீபாவளி பொருட்சந்தை விழா பினாங்கு ஓட்டோ சிட்டி அரங்கில் திறப்பு விழாக் கண்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார்.

மலேசிய இந்திய வர்த்தக சங்கத் துணை தலைவரும் டிபி கானா நெட்வோர்க் இயக்குநருமான திரு டிபி கானா, செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு சத்திஸ், திரு டேவிட் பினாங்கு தழிழர் முன்னேற்ற சங்கத் தலைவர் திரு பரமசிவம் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத்திறப்பு விழாவில் ஆடல் பாடல், ஆடை அலங்கார நடனம் என உள்நாட்டு கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பிரமுகர்கள் மற்றும் வருகையாளர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டனர்.
இவ்விழாவில் துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள், உணவுப் பதார்த்தங்கள் என பல்வகை பொருட்களும் மிக மலிவான விலையில் ஒருங்கே விற்கப்படுகின்றன. இதனால் தான் பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி பேரா, கெடா மாநிலங்களிலிருந்தும் மக்களின் கூட்டம் திரளாகக் காணப்பட்டது.

இறைவனின் உருவப்படங்கள் விற்கப்பட்டன.

24 செம்டம்பர் துவங்கி அக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்த தீபாவளி பொருட்சந்தை பெருவிழா கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது என்றால் மிகையாகாது. இவ்வாண்டு ஓட்டோ சிட்டி அரங்கில் மொத்தம் 150 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 70% கடைகள் உள்நாட்டு வணிகர்களுக்கும் 30% மட்டுமே வெளிநாட்டு வணிகர்களுக்கும் ஒத்துக்கீடுச் செய்யப்பட்டது என பேராசிரியர் அகம் மகிழ தெரிவித்தார். இவ்வருடம் ஏற்பாட்டுக் குழுவினர் தீபாவளி கொண்டாடும் மாதத்தில் இவ்விழா நடத்துவது பொது மக்கள் பொருட்கள் வாங்க இலகுவாக இருக்கும் என்றார் பேராசிரியர். மேலும், பொருளாதாரம் சீராக இல்லாத்தால் பொது மக்கள் சிக்கனத்துடன் தீபாவளி பண்டிகைக் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் இரண்டாம் துணை முதல்வர்.

பினாங்கு தமிழர் முன்னேற்ற சங்கத்திற்கு திரு டிபி கானா ரிம10,000 மானியமாக வழங்கினார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);