நடமாட்ட கட்டுப்பாட்டை மீறுவோருக்கு அபராதம் சரியே..!

பிறை – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிரப்பித்து 24-வது நாட்கள் எட்டிய நிலையில் பொது மக்களிடையே நிலவும் தாக்கம் மற்றும் அதனை மீறுவோர் மீது அபராத விதிப்பு குறித்து முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள் பிறை, மைடின் பேரங்காடி வளாகத்தில் கருத்து கணிப்பில் ஈடுப்பட்டனர்.

நாட்டில் அமல்படுத்தியுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறுவோர்களுக்கு அரசாங்கம் விதிக்கும் ஆயிரம் வெள்ளி அபராதம் சரினானதாகும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

செ.குணாளன்,55

“அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, பொது மக்கள் அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல அனுமதி வழங்கிய போதிலும் சில தரப்பினர் அளவுக்கு அதிகமான பொருட்கள் வாங்குகின்றனர். சிலர் கடன் வாங்கி அதிகமான அத்தியாவசிய பொருட்களைச் சேர்ப்பது, ஆரோக்கியமான செயலாக கருதவில்லை என செ.குணாளன் தெரிவித்தார்.

மேலும், பொது மக்கள் சமூக வலைத்தளங்களான இணையம், வானொலி, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களின் வாயிலாக இந்த கோவிட்-19 தொற்று நோய் குறித்த தகவல்களை அறிந்து செயல்பட வேண்டும்.

தொடக்கமாக, இந்தக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றாத தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இது கோவிட்-19 கிருமி தொற்றுக்கு அதிகமான வாய்ப்பு அளிப்பதால் அரசாங்கம் இந்த அமலாக்கத்தை மீறுவோர் மீது அபராதம் (ரிம்1,000) விதிப்பது வரவேற்கத்தக்கது என கூறினார்.

சிவா, 46

கோவிட்-19 தொற்று கிருமி பரவாமல் தடுப்பதற்கு பொது மக்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். பொது மக்கள் மெத்தன போக்குடன் செயல்பட்டால் இச்சூழ்நிலை மாற்றியமைப்பது மிக கடினம்.

பொது மக்கள் அடிப்படைப் பொருட்கள் வாங்குவதற்கான காலவரையறை நிர்ணயினக்கப்பட்ட வேளையில், மாலை 7.00 மணிக்கு மேல் காரணமின்றி வெளியே செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது சரியான தீர்வு என கருதுவதாக திரு சிவா,46 கூறினார்.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
கோவிட்-19 தொற்றுக் கிருமி பரவலை முறியடிக்கும் வரை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஷெரி தான்

“பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றுவதன் மூலம் அதன் பரவலைத் தடுக்க முடியும். காரணமின்றி வெளியே செல்லும் நபர்களால் ஆபத்து ஏற்படக் கூடும். ஏனெனில், இந்த கோவிட்-19 தொற்று யாருக்கு இருக்கு அல்லது இல்லை என அறிவது கடினம்.

இத்தோற்று நமக்கு ஏற்படும் போது நமது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும் என ஷெரி தான் வருத்தத்துடன் தெரிவித்தார்.