பட்டர்வொர்த்தில் ரிம5 பள்ளிச் சீருடை முன்முயற்சி திட்டம் மீண்டும் மலர்ந்தது

img 20251219 wa0043

 

பாகான் – பள்ளித் தவணை தொடங்குவதற்கு முன்பு சிறுவர்களைத் தயார்படுத்துவது பெற்றோருக்கு, குறிப்பாக பி40 பிரிவை சேர்ந்தவர்களுக்கு மிக சவாலான தருணமாகும்.

 

 குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல் தகுதியுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் மத்திய அரசாங்கத்தால்  வழங்கப்படும் ரிம150 ஆரம்பப் பள்ளி உதவித் திட்டம் (BAP) உண்மையில் போதுமானது அல்ல.

 

இருப்பினும், பட்டர்வொர்த் அருகே ஜாலான் தெலகா ஆயிரில்   பள்ளிச் சீருடைப் பொருட்களை மிக குறைந்த விலையில் நல்ல உள்ளம் கொண்ட வியாபாரி ஒருவரான செல்வம் இரண்டாவது ஆண்டாக இந்த  விற்பனையை முன்னெடுத்துள்ளார்.

 

இந்தக் கடையில், பள்ளி ஹிஜாப் ஒன்று ரிம1 ; பள்ளிச் சட்டைகள், பள்ளி கால்சட்டை மற்றும் விளையாட்டு கால்சட்டை ஒவ்வொன்றும்  ரிம5 விலையில் விற்கப்படுகின்றன; பள்ளிப் பைகளின் விலை ரிம10 முதல் ரிம15 என தரமானப் பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுகின்றன.

 வியாபாரி செல்வம்,வயது 41 மாணவர்களின் பள்ளித் தவணைக்கு முன்கூட்டியே தயார்படுத்துவதில் பெற்றோரின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒரு பள்ளிச் சீருடை ரிம5 என நிர்ணயிக்கப்பட்டு  மலிவான விலையில் விற்பனை செய்வது இரண்டாவது முறை, என்றார்.

 

 “இந்தப் பள்ளி ஆடைகள் அனைத்தும் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலைமற்றும் பேரங்காடியில் இருந்து எனக்குக் கிடைத்தது.

 

“இதனால்தான் இந்த முறை பள்ளிப் பருவம் மீண்டும் திறக்கப் போகிறது என்று நினைத்து, இந்தத் தொழிற்சாலையில் இருந்து துணிகளை  வாங்கி ஒன்று ரிம5க்கு விற்கத் துணிந்தேன் – வியாபாரம் செய்யும் போது,என் வாடிக்கையாளர்களின் நண்பர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயாராக உதவ இது சிறந்த முயற்சி, என்றார்.

 

“இந்த விற்பனையில், நிச்சயமாக லாப வரம்பு சிறியது; நீங்கள் 10 துணிகளை வாங்கினால் தான் அதன் மொத்த விலை ரிம50 மட்டுமே ஆகும்.

 

“எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான விலையில் விற்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

“நான் தீபகற்ப மலேசியாவின் வடப்பகுதியில் உள்ள  சந்தைகளில் வியாபாரம் செய்கிறேன், எனக்கு ஏற்கனவே விசுவாசமான வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளனர். எனவே நான் ரிம5 இல் பள்ளி ஆடைகளை விற்கும்போது, அவர்களின் ஆதரவைப் பெறுகிறேன். ஒவ்வொரு நாளும் மொத்த விற்பனை வருவாய் ரிம5,000 முதல் ரிம8,000 வரை உள்ளது,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

 

மேலும்,சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகள் காப்பக பிள்ளைகளுக்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நன்கொடையாகப் பள்ளிச் சீருடைகளை வாங்கி அன்பளிப்பு வழங்க எண்ணம் கொண்டவர்கள் இங்கு வந்து துணிகளை வாங்கி நன்கொடையாக வழங்குகின்றனர்.

img 20251219 wa0032
இடைநிலைப்பள்ளி சீருடைகளும் இங்கு கிடைக்கும்.

 

பள்ளிச் சீருடைகளை குறைந்த விலையில் விற்கும் இந்த வியாபாரிகளின் நல்ல எண்ணம் காரணமாக, வசதிக் குறைந்த மாணவர்களுக்கு அதிக அளவில் பள்ளிச் சீருடைகளை நன்கொடையாக வாங்கிக் கொடுப்பதில் தவறில்லை என அங்கு வருகையளித்த வாடிக்கையாளரில் இருவர் தெரிவித்தார்.

 

இந்த மலிவு விலை பள்ளிச் சீருடை முன்முயற்சி திட்டத்தின்  வாயிலாக அதிகமான பெற்றோர், சமூக ஆர்வாலர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

 

இங்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பென்சில் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

 

யோ எம்.கே.எம் பிராண்ட் திரைச்சீலை துணிக்கடையின் உரிமையாளர் செல்வத்தின் இந்த முன்முயற்சி திட்டம் அனைவரிடமும் பாராட்டும் மதிப்பும் பெற்றுள்ளது.

img 20251219 wa0010iimg 20251219 wa0012