பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு மறுசுழற்சி தொட்டி வழங்கப்பட்டது

பாயான் லெப்பாள் தமிழ்ப்பள்ளிக்கு மறுசுழற்சி தொட்டிகள் வழங்கினார் மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன்.
பாயான் லெப்பாள் தமிழ்ப்பள்ளிக்கு மறுசுழற்சி தொட்டிகள் வழங்கினார் மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன்.

பினாங்கு மாநில மாநகர் கழகம் “தூய்மை, பசுமை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு” என்ற கோட்பாடு பின்பற்றி பல திட்டங்கள் அமல்படுத்துகிறது. பினாங்கு தீவுப் பகுதியில் மட்டும் ஒரு நாளுக்கு சராசரி 550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது என மாநகர் கழக புள்ளி விபரம் குறிப்பிடப்படுகிறது. எனவே, மறுசுழற்சி திட்டம் அதிகரிப்பதன் வழி இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணப்படும் என்றார் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன்.
மறுசுழற்சி திட்டங்கள் மேற்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் .
தொடக்கமாக, மாணவர்களுக்கு மறுசுழற்சி பற்றிய நன்மையினைப் புகட்டுவதன மூலம் எதிர்காலத்தில் குப்பைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஏனெனில், இயற்கை மூலதனங்கள் பாதுகாக்கப்படும். இதனால் சுற்றுப்புறம் தூய்மைகேடின்றி பசுமையாக காட்சியளிக்கும்.
மறுசுழற்சி திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு பாயான் செப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு மறுசுழற்சி தொட்டிகள் அன்பளிப்பாக வழங்கினார் மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன். மறுசுழற்சி திட்டத்தை ஊக்குவிக்க வழங்கப்படும் 3 மறுசுழற்சி தொட்டிகளின் விலை ரிம750 ஆகும்.
எனவே, இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறை படுத்த அனைத்து பள்ளிகளிலும் மறுசுழற்சி தொட்டிகள் வழங்க முற்பட வேண்டும் என்றார். இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வு மேமோங்கும் என்றார். மறுசுழற்சி திட்டத்தை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்.