பினாங்கு இந்து தர்ம மாமன்ற வாழ்வில் ஒளியேற்றுவோம் திட்டம் தொடரப்படும் – தனபாலன்

Admin

பினாங்கு இந்து தர்ம மாமன்ற, அருள் நிலையம் பினாங்கு மாநில சிறை கைதிகளுக்கும், கருணை இல்லங்களுக்கும் தீபாவளி பலகாரங்களை சுயமாகத் தயாரித்து வழங்கியது.

கடந்த 20 ஆண்டுகள் பினாங்கில் இது போன்ற சமூக நற்காரியங்கள் செய்து வரும் இந்து தர்ம மாமன்றம், ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்  போதும் சமூக உதவிகளை வழங்க தவறியது அல்ல என்று அருள் நிலையத்தின் தலைவர் ந.தன்பாலன் கூறினார். மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள் நிலையம்,  ஓம் சக்தி ஆன்மீகம் மற்றும் தொண்டு அறக்கட்டளை இணை ஏற்பாட்டில் சமூக கடப்பாடாகச் சிறைக் கைதிகளுக்குத் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு நிகழ்ச்சி இங்குள்ள டேவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில்  40-க்கும் மேற்பட்ட தொண்டூழியங்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.

ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் முறுக்கு
தயாரிக்கும் திட்டத்தில் கலந்து சிறப்பித்தார்

தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறை கைதிகளுக்கும் பலகாரங்கள் வழங்கப்படுவதாக, மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள் நிலையத் தலைவர் ந.தனபாலன் தெரிவித்தார். அதே வேளையில் சிறையில் உள்ள கைதிகள் தங்களின் சிறை காலம் முடிந்து வெளியில் வரும்போது, சமூகத்துடன் இணைந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க இதுபோன்ற பொது அமைப்புகளின் தொடர்பு அவர்களுக்குத் தேவைப்படுவதாக அவர் கூறினார். பொதுவாகவே, அரசு சாரா இயக்கங்கள் வசதி குறைந்த பொது மக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் சார்ந்த தரப்பினருக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கி வரும் வேளையில்,  இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள் நிலையம் சிறை கைதிகளும் தீபாவளி கொண்டாட்டத்திலிருந்து தனித்துவிடபடக்  விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பலகார அன்பளிப்பு சிறைச்சாலையில் வழங்கி வருவதாக தனபாலன் நந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

பொது மக்கள் அனைவரும் குறிப்பாக இந்து தர்ம மாமன்றம் மற்றும் ஓம் சக்தி ஆன்மீக மற்றும் தொண்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் தயாரிக்க இந்தியர்களின் பாரம்பரிய பலகார வகையான முறுக்கு, அதிரசம் மற்றும் பல இனிப்பு வகைகளும் சேர்க்கப்பட்டுப் பொட்டலமாகத் தயாரிக்கப்பட்டன. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக  பினாங்கு மாநில அரசாங்க  மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு, மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் வருகையளித்தார். இத்திட்டம் வெற்றிகரமாக வழி நடத்த நிதியுதவியும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தயார் செய்யப்பட்ட 1500 பலகாரப் பொட்டலங்களை பினாங்கு சிறைச்சாலைக்கு 3, 800 பொட்டலமும் ஜாவி சிறைச்சாலைக்குப் பொட்டலமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் பினாங்கு இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் பலகாரங்களைத் தயாரித்து வசதி குறைந்தவர்களும்,கருணை இல்லங்கள், சிறைச்சாலை கைதிகளுக்குப் பலகாரங்களை வழங்குவதுபோல், பினாங்கில் உள்ள அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் தங்களின் இயக்கங்களின் வழி சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் இதயங்களின் தொண்டு, சமூக சேவை என்ற சிந்தனைகளை விதைக்க செபராங் பிறை தொழில் நுட்ப கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து தீபாவளி பலகாரங்கள் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டத்தை முன்னிட்டு, பினாங்கு இந்து தர்ம மாமன்றத்துக்கு நன்றி தெரிவிப்பதாகக் கல்லூரி மாணவர் பிரதிநிதி சங்கரா குப்புசாமி கூறினார்.

தொடர்ந்து, இந்துதர்ம மாமன்றம் பீஸ் குழந்தைகள் காப்பத்தில் வாழும் 13 சிறுவர்களுக்கு கலாச்சார உடைகளான பட்டு பாவாடை மற்றும் வேட்டி ஜிப்பாகள் உடன் தீபாவளி ‘அங்பாங்’ வழங்கியது. சக மனிதர்கள் போலவே இச்சிறுவர்களும் மகிழ்வுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்பரிசுகள் வழங்கப்பட்டதாக அருள் நிலையத்தின் தலைவர் ந.தன்பாலன் கூறினார். மேலும், வாழ்வில் ஒளியேற்றுவோம் திட்டம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இம்மாமன்றம் ஏற்று நடத்தும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், முன்னனி வரிசை பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பினாங்கு பொது மருத்துவமனையில் உணவு பதார்த்த பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.