பினாங்கு மாநிலத்தின் வரவு செலவுத் திட்டம் 2014

பினாங்கு மாநிலம் மக்கள் கூட்டணி அரசின் ஆட்சிக்குப் பின் பல துரித வளர்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனவே, கடந்த 29 செப்டம்பர் 2013-ஆம் நாள் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 2014-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். அடுத்தாண்டிற்கானக் கருப்பொருள் “அனைத்துலக மற்றும் சாதுரியமான பினாங்கு மாநிலம்” ஆகும் 2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், ஊதியம் அல்லது வரவு நிர்வாக அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாநில வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் மற்றும் சமூக பொருளாதார மேன்மை ஆகிய மூன்று முக்கிய கூறுகள் உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டம் மாநில வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக அமல்படுத்தி வருமானத்தை பெருக்கி அதில் மக்களும் பயனடைய வேண்டும் என்பதாகும்.  2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிர்வாகத் திட்டத்திற்கு ரிம843,195,379 மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம238,995,320  மொத்தமாக ரிம 962,190,699 ஒதுக்கப்பட்டுள்ளது.

படம் 1: 2014-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தை அறிவித்தப் பின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்2014 வரவு செலவுத் திட்டம் ஒரு கண்ணோட்டம்:

* சமத்துவப் பொருளாதாரத் திட்டம் (AES)

  • மாதாந்திர  குடும்ப வருமானம் ரிம 790ஆக உயர்த்தப்பட்டுள்ளது
  • தங்கத் திட்டத்திற்கு ரிம75 மில்லியன் ஒதுக்கீடு

–          தங்க பிள்ளை ரிம 200

–          தங்க மூத்த குடிமக்கள், தனித்துவாழும் தாய்மார்கள், ஊனமுற்றோர் என தலா ரிம 100

–          தங்க முதியோர் இறப்பு சடங்கிற்கு ரிம1,000

  • முழு நேர தங்கத் தாய் திட்டம்க் (புதியத் திட்டம்) ரிம 100
  • வாடகைக் கார் ஓட்டுனர் சன்மானம் ரிம 1.3 மில்லியன் ஒதுக்கீட்டில் ஒருவருக்குத் தலா ரிம 600 இரண்டு தவணையாக வழங்கப்படும்.

 

 

 

v      இஸ்லாமியத்தை நிலைநிறுத்துதல்

  • மசூதி நிறுவன வளர்ச்சிக்கும் மற்றும் இஸ்லாமிய பள்ளி வளர்ச்சிக்கும் ரிம 11.17  ஒதுக்கீடு
  • பினாங்கு இஸ்லாமிய அனைத்துலக தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு கூடுதல் கட்டிடம் கட்ட ரிம 6 மில்லியன் ஒதுக்கீடு.
  • இஸ்லாமிய அறப்பணி வாரியச் சொத்துக்களை அபிவிருத்திச் செய்யவும் இஸ்லாமிய துணை நிறுவனத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

*      பினாங்கு மாநில இலவச இணைய சேவை

  • அடுத்த ஆண்டு முதல் 1550 ஹொட்ஸ்போட் கருவிப் பொருத்தப்பட்டு பினாங்கு மாநிலம் முழுவதும் கூடுதல் இணைய சேவை வழங்கப்படும்

*      குற்றத் தடுப்பு

  • 180 இரகசியக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த ரிம3.2 மில்லியன் செலவிடப்படும்.

*      ஆராய்ச்சி

  •  அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு ரிம 25 மில்லியன் ஒதுக்கீடு
  • டத்தோ டாக்டர் ஊ விங் தையின் ஆலோசனையின்படி அறிவியல் ஆராய்ச்சிக்கு ரிம 4 மில்லியன் ஒதுக்கீடு.
  • அடுத்த ஆண்டு முதல் 1550 ஹொட்ஸ்போட் கருவிப் பொருத்தப்பட்டு பினாங்கு மாநிலம் முழுவதும் கூடுதல் இணைய சேவை வழங்கப்படும

*      கல்வி

  • உதவிப் பெறும் பள்ளிகளுக்கு ரிம 12 மில்லியன் ஒதுக்கீடு
  • மத்திய அரசின் ஒத்துழைப்போடு ஆயிர் பூத்தே வட்டாரத்தில் 3-5 நிலப்பரப்பில் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டப்படவுள்ளது.
  • மத்திய அரசு அனுபதி வழங்கினால் பாகானில் தமிழ் இடைநிலைப்பள்ளிக் கட்ட மாநில அரசு இலவசமாக நிலப்பரப்பை வழங்கும்.

*      இலவச முலை ஊடுகதிர்ப்படம் சோதனை (Mamogram Test)

  • 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரிம3.5 மில்லியன் செலவில் இலவச மருத்துவ பரிசோதனை.

*      கூழ்மப்பிரிப்பு மையம் (Pusat Dialisis)

  • ஒருவருக்கு தலா ரிம30 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • பாலிக் புலாவ் பகுதியில் கடந்த 6 ஜூன் 2013 திறக்கப்பட்டது. மற்றொன்று செபெராங் பிறை வட்டாரத்தில் கட்டப்படவுள்ளது.

*      பெண்கள் இயக்கம்

  • பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பினாங்கு மாநில ஐந்து மாவட்டங்களில் ஏறக்குறைய 1500 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் படை நிறுவப்படடுள்ளது.
  • 35 வயதுக்கு மேற்பட்டப் பெண்களுக்கு
    இலவச மார்பக பரிசோதனை, தங்க தாய்மார்கள் திட்டத்திற்கு மாதர்களைப் பதிவுச் செய்தல் போன்ற சேவைகளை மேற்கொள்ளப்படும்.

*    இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாடு

  • சுக்மா விளையாட்டுப் போட்டி வெற்றியாளர்களுக்கு 50% ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும்.
  • கொம்தாரில் 47-வது மாடியில் அரசாங்க ஊழியர்களுக்கு  உடற்பயிற்சி மையம் கட்டப்படவுள்ளது.
  • பினாங்கு இளைஞர் கற்றல் மையம் (penang youth learning centre) கம்போங் புவா பாலாவில் கட்டப்படவுள்ளது.

*      விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு

  • 115.2 நிலப்பரப்புக் கொண்ட  மத்திய செபெராங் பிறை ஜுருவிலுள்ள தாமான் கெகால் உணவு உற்பத்தி மையம்,  277.6 நிலப்பரப்புக் கொண்ட பெனாகா மீன்வளர்ப்பு பகுதி ஆகிய பகுதிகள் நாட்டின் முதலிட உணவு உற்பத்தி மையமாக உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  •  மலேசிய மீன்பிடி மேம்பாட்டு வாரியத்தின் கீழ் பதிவுப் பெற்ற 2,981 மீனவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரிம1.6 மில்லியன் ஒதுக்கீடு.
  •  விவசாயி தொழிலில் முனையும் இளைஞர்களுக்கு சிறுக் கடனுதவித்  திட்டத்தின் மூலம் ரிம5000 வழங்கப்படும்.

*      மாநில அரசு சேவையை வலுப்படுத்துதல்

  • பினாங்கு மாநில செயலாலர் அலுவலகம், மாநில நிதியியல் அலுவலகம், தென்மேற்கு நில அலுவலகம், நிலம் மற்றும் கனிம நில அலுவலகம், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் மற்றும்  பினாங்கு பொது நூலகம் ஆகிய  அரசு சார்ந்த ஐந்து துறை அலுவகங்கள் நான்கு நட்சத்திர தரமதிப்பீடு அடைந்ததால் ரிம15000 சன்மானம் வழங்கப்படும்.

*      அரசு ஊழியர்களுக்கு போனஸ்

  • 2013-ஆம் ஆண்டுக்கான மற்றோறு அரைமாத போனஸ் டிசம்பர் மாதம் வழங்கப்படும். குறைந்தபட்சம் ரிம700-ஐ பெறுவர். காபா (kafa) கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் ரிம400-ஐ பெறுவர்.
  • கடந்த ஆகஸ்டு  மாதம், நோண்புப் பெருநாளை முன்னிட்டு 3910 அரசு ஊழியர்களுக்கு ரிம 4.4 மில்லியன் ஒதுக்கீட்டில் அரை மாத போனஸ் வழங்கப்பட்டன.
  • 2013-ஆம் ஆண்டு மாநில அரசு 1 மாத போனஸ் வழங்கியுள்ளது.

*     சமூக மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு

  • சமூக மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு ரிம200 அதிகரிப்பு
  • 287 சமூக மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழுவை நிர்வகிப்பதற்கு ரிம1.38 மில்லியன் கூடுதல் ஒதுகிகீடு வழங்கப்படும்
  • சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர ஊக்கத்தொகை ரிம6000-மாக உயர்த்தப்படும்.
  • எதிர்க்கட்சித் தலைவருக்கு ரிம2000-மாக உயர்த்தப்படும்