பினாங்கு மாநிலத்தில் கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பு

Admin
சந்த கிளாவிஸ் உடன் அன்பை பரிமாறி கொள்ளும் சிறுவர்கள்.
சந்த கிளாவிஸ் உடன் அன்பை பரிமாறி கொள்ளும் சிறுவர்கள்.

பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி அரசு பல இடங்களில் கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தியது. பிறைத் தொகுதியின் சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழகமும் பிறை சட்டமன்றமும் இணைந்து கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடுச் செய்தது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய துணை முதல்வர் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என மாநில இரண்டான் துணை முதல்வர் ப.இராமசாமி கேட்டுக்கொண்டார். அத்தினத்தன்று கலைநிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தன. அங்கு பொதுமக்கள் புற்றீசல் போல் திரண்டனர். இந்நிகழ்வில் நடைபெற்ற விருந்தோம்பலில் ஏறக்குறை 1000 பேர் இடம்பெற்றனர். இதனிடையே, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான அன்பளிப்பு பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் ப.இராமசாமி அவர்களின் பொற்கரத்தால் வழங்கப்பட்டன.

இதனிடையே, பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தாமான் சாய் லேங் மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி.கஸ்தூரி ராணி பட்டு கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய குமாரி.கஸ்தூரி அனைவருக்கும் தமது கிறிஸ்மஸ்

பல இன மக்களுடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு.
பல இன மக்களுடன் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு.

வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். அனைவரும் ஒன்றிணைந்து ஒருமனதோடு இந்நாளை கொண்டாடுவோம் என மேலும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று வருகையாளர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தன. பொதுமக்களுக்கு பலவகையான தின்பண்டங்களும் அறுசுவை உணவுகளும் பரிமாறப்பட்டது என்றால் மிகையாகது. பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு அனைத்து இன மக்களின் ஒற்றுமைக்கும் பாடுப்படும் என்பது வெள்ளிடைமலையே.