
பினாங்கு மாநிலத்திற்கு புதிய தலைமை காவல்துறை அதிகாரியாக பணி நிமித்தம் செய்யப்பட்டுள்ள டத்தோ தெய்வீகன் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டார்.
பினாங்கு மாநிலத்தில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து தாம் அதனை துடைத்தொழிக்க விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாக மாநில முதல்வரிடம் நம்பிக்கை தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் இக்கொள்ளை சம்பவங்கள் கருப்பு புள்ளியாக அமைவதை தாம் அறிவதாக குறிப்பிட்டார் டத்தோ தெய்வீகன்.
பினாங்கு காவல்துறை ஆணையம் வழிப்பறி கொள்ளை சம்பவங்களை ஒழிக்க புதிய அணுகுமுறையைக் கையாளவிருப்பதாகவும் பினாங்கு வாழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மாநில முதல்வர் பினாங்கு மாநிலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க காவல்துறையினருடன் ஒத்துழைப்பை நல்கவிருப்பதாகக் குறிப்பிட்டார். இச்சந்திப்பு கூட்டத்தில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியும் உடன் கலந்து கொண்டார்.