மலிவு சாரய ஒழிப்பு “விழிப்புணர்வு ஓட்டம்

திரு தியாகராஜன், திரு டேவிட் மார்ஷல், திரு சத்தீஸ் முனியான்டி, டத்தோ மைமுனா முகமது லோ ஜூ உவாட், ரோசாலி முகமது, சுல்கிப்லி இப்ராஹிம் (இடமிருந்து வலம்) ஆகியோர் மலிவு சாரய ஒழிப்பு "விழிப்புணர்வு ஓட்டம்" பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
திரு தியாகராஜன், திரு டேவிட் மார்ஷல், திரு சத்தீஸ் முனியான்டி, டத்தோ மைமுனா முகமது லோ ஜூ உவாட், ரோசாலி முகமது, சுல்கிப்லி இப்ராஹிம் (இடமிருந்து வலம்) ஆகியோர் மலிவு சாரய ஒழிப்பு “விழிப்புணர்வு ஓட்டம்” பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

மலிவு சாரயத்தைத் துடைத்தொழிக்கும் பொருட்டு “விழிப்புணர்வு ஓட்டம்” வருகின்ற அக்டோபர் மாதம் 11-ஆம் திகதி செபராங் பிறை நகராண்மைக் கழகத் திடலில் நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் மாணவர்கள் உட்பட 8,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு மலேசிய மலிவு சாரய ஒழிப்பு இயக்கம், பினாங்கு மாநில அரசு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக ஏற்பாட்டில் நடைபெறுவதாக நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.டேவிட் மார்ஷல் கூறினார்.

இதுவரை 18,000 பொது மக்கள் இந்த சாரய ஒழிப்புத் திட்டத்தில் கையொப்பமிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தாகவும் மேலும் இவ்விழிப்புணைர்வு ஓட்டத்தின் வழி 100,000 பேர்களின் கையொப்பம் சேகரிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் மற்றுமொரு நகராண்மைக் கழக உறுப்பினர் திரு சத்தீஸ் முனியான்டி. மலேசியாவிலே பினாங்கு முதல் மாநிலமாக மலிவு சாரயத்தைத் துடைத்தொழிக்கவும் கட்டுப்படுத்தவும் வித்திட இந்த விழிப்புணர்வு ஓட்டம் மைய கற்களாக அமையும் என மேலும் கூறினார். மலிவு சாரய ஒழிப்பு பிரச்சாரத்தின் மூலம் நடுத்தர வருமானம் பெறும் குடும்பம் புற்றுநோயால் இறக்கும் அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படுவர்.

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாத் தொடக்கி வைப்பார் என்றும் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களும் கலந்து கொள்வார் என செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் அறிவித்தார். செபராங் பிறை நகராண்மைக் கழகச் செயலாளர் ரோசாலி முகமது மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு தியாகராஜன், லோ ஜூ உவாட், சுல்கிப்லி இப்ராஹிம் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரிம15 அதேவேளைவில் 13 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் உட்பட அனைவருக்கும் ரிம25 பங்கேற்பாளர் கட்டணமாக விதிக்கப்படும். இந்த ஓட்டம் போட்டியாக நடைபெறாமல் விழிப்புணர்வு ஓட்டமாக அமைவதோடு மட்டுமின்றி பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் கொண்ட பங்கேற்பாளர்கள் செபராங் பிறை அலுவலகம், பிறை சட்டமன்ற சேவை மையம், அல்லது 012-4472042/01124215661/045489875 எண்களுக்குத் தொடர்புக் கொள்ளலாம். மேலும், ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் www.wceevents.com.my எனும் அகப்பக்கத்தில் பதிவுச் செய்யலாம். பதிவுச் செய்யும் இறுதி நாள் 15/9/2015.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);