மூத்த குடிகள் 100 ரிங்கிட் பெற்று மகிழ்ந்தனர்.

Admin

பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த ஒரு வாரக் காலத்தில் மூத்த குடிகளுக்கான தங்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவதற்காகத் தள்ளி வைக்கப்பட்ட தங்க மூத்த குடிகள் திட்டம் கடந்த மே 18 மற்றும் 19 திகதி பினாங்கு முழுவதும் நடைபெற்றது.  சமூக நலன் மற்றும் சுற்றுச் சூழல் குழுத் தலைவர் மதிப்பிற்குரிய பீ பூன் போ அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இத்திட்டத்தைப் பற்றிய அறிவிப்பைச் செய்தார்.

2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தங்க மூத்த குடிகள் திட்டத்தில் குறைந்தது 60 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் அவர்களின் சேவையைப் போற்றி 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

தங்க மூத்த குடிகள் திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற பெறுநர்களின் எண்ணிக்கை 

ஆண்டு

மூத்த குடிகளின் எண்ணிக்கை

2011

122,689

2012

136,288

2013

140,055 

இவ்வாண்டில் 3767 மூத்த குடிகள் கூடுதலாகப் பதிவு செய்துள்ளதை திரு பீ பூன் போ சுட்டிக் காட்டினார். கடந்த 18 & 19 திகதியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மே பொருளகத்தில் மூத்த குடிகள் தங்களின் 100 ரிங்கிட்டைப் பெற்றுக் கொண்டனர். ஆங்காங்கே நடைபெற்ற இந்நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் தேர்த்தெடுக்கப்பட்ட மே பொருளகத்திற்குச் சென்று மூத்த் குடிகளைச் சந்தித்தார்.

      ஆயர் ஈத்தாமில் உள்ள மே பொருளகத்திற்கு வருகை மேற்கொண்ட முதல்வர் லிம் அங்கு வந்திருந்த மூத்த குடிகளின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்று மகிழ்ந்தார். பினாங்கு வாழ் முதியோர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியையும் புன்னைகையும் தொடர்ந்து காண வேண்டும் என்றார். பினாங்கு மாநிலம் வரவு செலவில் பதிவு செய்யும் மிகை நிதியைக் கொண்டு மாநில அரசின் அனைத்துத் தங்கத் திட்டங்களும் தொடரப்படும் என்று உறுதியளித்தார். அதுமட்டுமன்றி அடுத்தாண்டு ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ள தங்கத் தாய்மார்கள் திட்டதிற்கும் பொது மக்களிடமிருந்து ஆதரவு கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அருகில் ஆட்சிக் குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் ஆகியோருடன் 100 ரிங்கிட் பெற்றுக் கொண்ட மூவினத்தைச் சேர்ந்த மூத்த குடிகள்
மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அருகில் ஆட்சிக் குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் ஆகியோருடன் 100 ரிங்கிட் பெற்றுக் கொண்ட மூவினத்தைச் சேர்ந்த மூத்த குடிகள்