2014-ஆம் ஆண்டுக்கானத் திருமுறை ஓதும் போட்டி ஸ்ரீ பினாங் அரங்கில் நடைபெறவுள்ளது

கடந்த 13-7-2013-ஆம் நாள் மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் திருமுறை ஓதும் போட்டி நடைபெற்றது. இப்போட்டி ஸ்ரீ வீரகாளியம்மன் தேவஸ்தான அரங்கத்தில் இடம்பெற்றது. இப்போட்டி 6 வயது முதல் 12 வயது வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.  இந்நிகழ்வில் திருமுறை ஓதுதல், சமயச் சொற்போர் போட்டி இடம்பெற்றது. தனிநபர் மற்றும் நான்கு பேர் கொண்ட குழு முறையில் இத்திருமுறை ஓதும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். அதோடு மாணவர்கள் சமய அடிப்படையிலானச் சொற்போர் ஆற்றி வருகையாளர்களை மெய்சீலிர்க்கச் செய்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தனராக ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார். இப்போட்டியின் அனைத்து பிரிகளுக்கும் முறையே ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுக் கோப்பை மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் அவர்களின் பொற்கரத்தால் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களின் சமய உணர்வைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒவ்வொரு ஆண்டும் சிரமம் பாராது இப்போட்டியை ஏற்று நடத்தும் மலேசிய இந்து சங்கத்திற்கு ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் பாராட்டு மாலை சூட்டினார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்த திருமுறை ஓதும் போட்டிக்குத் தமது முழுமையான ஆதரவு அளிப்பதோடு இப்போட்டியை ஸ்ரீ பினாங் அரங்கத்தில் மிக விமரிசையாக நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுத்தார். அடுத்த ஆண்டுக்கானத் திருமுறை ஓதும் போட்டியின் முழுமையான நிதியுதவி திரு நேதாஜி இராயர் அவர்களால் வழங்கப்படும் என்பது வெள்ளிடைமலையாகும்.