ஆயிர் பூத்தே சமூக மேம்பாட்டு மற்றும் முன்னேற்றம் கழகமும் பினாங்கு பொது மருத்துவமனையும் இணைந்து இரத்த தான முகாம் ஒன்றினை கடந்த 24-ம் திகதியன்று கொடிமலை பொது மண்டபத்தில் ஏற்பாடு செய்தனர். இதனை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வரும் ஆயிர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான மேதகு லிம் குவான் எங் அவர்கள். இந்நிகழ்வு பினாங்கு பொது மருத்துவமனையின் இரத்த வங்கியை நிரப்புவதற்காகவும் நோயாளிகளுக்கு உதவும் நோக்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இரத்த தானம் முகாமில் சிறப்புரையை வழங்கிய மேதகு லிம் குவான் எங் அவர்கள் ஆயிர் பூத்தே சமூக மேம்பாட்டு மற்றும் முன்னேற்றம் கழகத்தின் முயற்சியை பாராட்டினார். தற்போதைய சூழ்நிலைக்கு பெரியோர் முதல் சிறியவர் என அதிகமானோருக்கு தொடர்ந்தாற்போல் இரத்த தானம் உதவிகள் தேவைப்படுகிறது. அனீமியா (Anemia), தலசீமியா (Thalassaemia) மற்றும் இன்னும் பல நோய்களால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறப்பகுதிகளில் ஏழ்மையான நிலையில் வாழ்கின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான இரத்த தானம் உதவிகள் அளப்பரியது என்றார் மாநில முதல்வர் அவர்கள்.

இந்நிகழ்வில் மூவின மக்களும் ஒன்றிணைந்து இரத்த தானம் செய்யதனர் என்பது பாராட்டக்குரியதாகும். இந்த ஒத்துழைப்பின் மூலம் இன பேதம் பாராமல் ஒருவருக்கு ஒருவர் உதவும் மனபான்மை மேலோங்கும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள். பினாங்கு வாழ் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்துமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக் கொண்டனர். போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு பழக்கங்கள், சுற்றுப்புற சுகாதாரம் போன்றவையாவும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வித்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.} else {