ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை இனிதே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு பல கொடை வள்ளல்கள் ஆண்டுத்தோறும் பல தொண்டுகள் வழங்கி வருகின்றனர். அவ்வகையில் பல ஆண்டுகளாகத் தொண்டுள்ளம் கொண்ட டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அவர்களின் நற்பணிக்குழுவினரும் பட்டர்வொர்த் சமூகநலத்துறையும் இணைந்து ஏழை எளியோருக்கு பரிசுக்கூடை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்த ஆண்டு ஏறக்குறைய 500 ஏழை மக்களுக்கு பரிசுக்கூடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஹஜி அகமது படாவி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குறிய திரு தனசேகரன், மதிப்பிற்குறிய பீ புன் போ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு தொடர்ந்து 34-வது முறையாக நடத்தப்படுவதைக் கண்டு அகம் மகிழ்வதோடு தமது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளையும் மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் தெரிவித்தார். இந்நிகழ்வை ஏற்று நடத்தும் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அவர்களுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
இந்நிகழ்வில் அனைத்து இன ஏழை மக்களுக்கும் பரிசுக்கூடை வழங்கியது சாலச்சிறந்தாகும். இந்தப் பரிசுக்கூடையில் அரிசிப்பொட்டலம் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மாநில முதல்வரின் பொற்கரத்தால் ஏழை மக்களுக்குப் பரிக்கூடை வழங்கப்பட்டன.