உடல் ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தீபத் திருநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டன

2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூகத்தினருக்கும் பல வழிகளில் தொண்டுகள் ஆற்றி வருகின்றனர். 3-வது ஆண்டாக கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் திகதி ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத்தின் ஏற்பாட்டில் உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டன.  இந்நிகழ்வு ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத்தில் விமரிசையாக நடைபெற்றது.

மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் ரிம2000-க்கானக் காசோலையை ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத் தலைவர்  திரு டவிந்தரிடம் வழங்கினார். உடன் குருநாதர் திரு ஞானசேகரன் மற்றும் செயளாலர் திரு தமோதிரன்
மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் ரிம2000-க்கானக் காசோலையை ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத் தலைவர்
திரு டவிந்தரிடம் வழங்கினார். உடன் குருநாதர் திரு ஞானசேகரன் மற்றும் செயளாலர் திரு தமோதிரன்

இந்நிகழ்வில் உடல் ஊனமுற்றோர்,  ஆதரவற்ற குழந்தைகள், தனித்து வாழும் தாய்மார்கள் என 250 பேருக்குப் பரிசுக்கூடை வழங்கப்பட்டன. சத் நிகல்ஸ் ஆசிரமம், இராமகிருஷ்ணா ஆசிரமம், பினாங்கு ஊனமுற்றோர் சங்கம் என 8 ஆதரவற்ற இல்லங்களிலிருந்து மதிய விருந்தோம்பலில் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார். 3வது ஆண்டாகத் நடத்தப்படும் இந்த நிகழ்வுக்குத் தொடர்ந்து தமது வற்றாத ஆதரவு அளிக்கபடும் என மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்விற்கு மாநில  மக்கள் கூட்டணி அரசு சார்பாக ரிம2000-ஐ மானியமாக ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத்தின் தலைவர் திரு டவிந்தரிடம் கொடுக்கப்பட்டது. மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தனித்து வாழும் தார்மார்களுக்குப் பரிசுக்கூடை வழங்கினார்.

தீபத் திருநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு மதிய உணவு மற்றும் பரிசுக்கூடை வழங்குவதில் ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜம் பெருமிதம் கொள்வதாகத் தலைவர் திரு டவிந்திரன் கூறினார். ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜம் ஐயப்பப் பூஜை, அரசு தேர்வை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களுக்காகச் சிறப்பு பூஜை மற்றும் தீபத் திருநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்குதல் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் இனிதே நடத்தி வருவது பாராட்டக்குறியதாகும்.