பாயான் பாரு குருத்வாரா சாயிப் ஆலயம் திறப்பு விழாக் கண்டது

Admin
புதிய குருத்வாரா சாயிப் தளத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ மற்றும் முக்கிய பிரமுகர்கள்
புதிய குருத்வாரா சாயிப் தளத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ மற்றும் முக்கிய பிரமுகர்கள்

பினாங்கு பாயான் பாருவில் சீக்கியர்களின் வழிபாட்டு தளமான குருத்வாரா சாயிப் வழிபாட்டு தளம் புதிய பொழிவுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழாக்கண்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக், பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரொசாலி ஜாபார் மற்றும் குருத்வாரா ஆலயத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரபின்டர்ஜிட் சிங் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில அரசு சீக்கியர் சமூகத்தினருக்குத் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றிக் கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர். மாநில அரசு நிலம் வழங்கல், நிர்மாணிப்பு நிதியுதவி என சுமார் ரிம504 கோடியை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.. இப்புதிய கட்டிடம் பினாங்கு மாநில தூய்மை, பசுமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய குருத்வாரா கட்டிடம் சுற்றுப்பயணிகளையும் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார் திரு.ஜெக்டிப்.

வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர்கள்
வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர்கள்

பினாங்கு மாநிலம் அறிமுகம் படுத்திய இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தள நிதியம் முதல் முறையாக பாயான் பாரு குருத்வாரா சாயிப்க்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிதியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் இதர வழிபாட்டு தளங்கள் வீடமைப்பு ஆட்சிக்குழு அலுவலகத்தையோ அல்லது தொலைபேசி வழியும் தொடர்புக்கொள்ளலாம். பாயான் பாரு குருத்வாரா சாயிப் கட்டிட நிர்மாணிப்புக்கு மேலும் ரிம1.2 மில்லியன் தேவைப்படுவதால் அனைத்து நல்லுள்ளங்களின் உதவியை நாடுகின்றனர் குருத்வாரா சாயிப் நிர்வாகத்தினர்.