பட்டர்வொர்த் – செபராங் பிறை மாநகர் கழகம் இன்று “செபராங் பிறை முன்னுரிமை திட்டம் 2026” (SPCP 2026) ஐ அறிமுகப்படுத்தியது. இது 10 மூலோபாய முன்னுரிமைகளால் வழிநடத்தப்படுகிறது. இது டிஜிட்டல் உருமாற்ற மேலாண்மை மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான 115 திட்டங்கள் மற்றும் 136 செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
செபராங் பிறை மாநகர் கழகம் பொருளாதாரம், சமூகம், நிர்வாகம் மற்றும் சேவை அம்சங்களை உள்ளடக்கிய பினாங்கு2030 தொலைநோக்கு உடன் இணங்க, பாதுகாப்பான, மீள்தன்மை, நிலையான நகரத்தை உருவாக்குவதற்கும், மாநகர் கழகத்தின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாக செபராங் பிறை மேயர் டத்தோ பட்ருல் அமீன் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டின் எம்.பி.எஸ்.பி இன் மூன்று முக்கிய முன்னுரிமைகள் மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகும். அதாவது திறமை, வெளிப்படை மற்றும் நம்பகமான மேலாண்மை நடைமுறைகள்; விரைவான முடிவெடுப்பு மற்றும் துல்லியமான தரவை இயக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்; மற்றும் உள்ளடக்கிய, போட்டித்தன்மை வாய்ந்த, மக்களுக்கு ஏற்ற நகரத்தை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்து மூலோபாய முன்னுரிமைகளில் பாதுகாப்பான சூழல், உயர்தர உள்கட்டமைப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், பசுமை மேம்பாடு & சுத்தமான சுற்றுசூழல், புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு, போட்டி நிறைந்த நகர்ப்புற பொருளாதாரம், மேம்பட்ட கலாச்சார பாரம்பரியம், மீள்தன்மை & சமூக பங்கேற்பு உடன் சமமான நகர்ப்புற மேம்பாடு போன்ற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு கூறுகளை இத்திட்டம் முன்னிலைப்படுத்துறது.
“இந்த இலக்குகளை அடைவதற்கான திறவுகோல் டிஜிட்டல் மாற்றத்தை இயக்குதல், அறிவார்ந்த நகரம் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை வழங்குதல், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் குடிமக்களின் உள்ளீட்டை மதிப்பிடுதல் ஆகியவையும் அடங்கும்.”
செபராங் பிறை முன்னுரிமை திட்டம் 2026 நிகழ்ச்சியில் , செபராங் பிறை மாநகர கழகம் 10 மூலோபாய திட்டங்களை செயல்படுத்த இலக்கு கொண்டுள்ளதை மேயர் டத்தோ படருல் கூறினார். அவை பின்வருமாறு:
1) புறா அகற்றும் திட்டம்
2) வெள்ள அபாய வரைபடம்
3) பட்டர்வொர்த் போக்குவரத்து நெரிசல் குறைப்பு திட்டமிடல் மற்றும் பரிந்துரைகள்
4) டிஜிட்டல்மயமாக்கப்பட்ட ஒப்புதல் செயல்முறை
5) நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டம் 1976 இன் பிரிவு 35 இன் அடிப்படையில் மேம்பாட்டு விதிமுறைகள்
6) தொழில்முனைவோருக்கு ஏற்ற திட்டம்
7) தற்காலிக வணிக உரிமம்
8) திறமையான அமலாக்கம் (வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்துதல்)
9) பட்டர்வொர்த் எக்ஸ்பிரஸ் மேம்பாடு 2.0
10) கைவிடப்பட்ட கட்டிடங்கள் மூலம் வரி அல்லாத வருவாயை அதிகரித்தல்