தைப்பூசம் என்றாலே, ஆழ்ந்த பக்தி நம்பிக்கையுடன் முருகப் பெருமானுக்காக காவடி, பால் குடம் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை ஏந்தி பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்வது அனைவரின் நினைவிற்கு வரும். உடல் வலி மற்றும் பல சவால்களைத் தாண்டி செய்யப்படும் இந்த வழிபாடு, தமிழர்களின் ஆன்மிக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முக்கிய வைபவமாகவும், சமூகத்தை ஒன்றிணைக்கும் பெருவிழாவாகவும் திகழ்கிறது.

இந்த காவடிகள் வெறும் அலங்காரக் கட்டமைப்புகள் மட்டுமல்ல; அவை பக்தியின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றை உருவாக்கும் கைவினை கலைஞர்களுக்கு, காவடி செய்தல் ஒரு தொழிலாக மட்டும் இல்லாமல், ஆழ்ந்த ஆன்மீக உணர்வில் வேரூன்றிய கைவினையாகும். அது ஆர்வம், தூய்மை, சுய ஒழுக்கம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகத் திகழ்கிறது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக காவடிகளைத் தயாரிக்கும் கைவினை கலைஞரான கே.பிரகலாதன் இந்த உணர்வை பகிர்ந்து கொண்டார். அவர் காவடியின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு தயாரிப்பாக மட்டுமல்ல, தைப்பூசத்திற்குத் தயாராகும் பக்தர்களுக்கு அர்த்தம் நிறைந்த வேண்டுதலாகப் பார்க்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக காவடிகளைத் தயாரித்து வரும் கைவினை கலைஞர் கே. பிரகலாதன், இந்த ஆன்மீக உணர்வை மனமார பகிர்ந்து கொண்டார். காவடியின் ஒவ்வொரு பாகத்தையும் அவர் வெறும் ஒரு தயாரிப்பாக அல்லாமல், தைப்பூசத்திற்குத் தயாராகும் பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் அர்த்தம் நிறைந்த வேண்டுதலுமாகவே பார்க்கிறார்.

கைவினை மற்றும் அதன் ஆன்மீக பயணத்தின் தனது அர்ப்பணிப்பிற்காக, ஒவ்வொரு காவடியையும் தயாரிக்கும் போது சைவத்தை கடைப்பிடிப்பதாக பிரகலாதன் கூறினார்.
பிரகலாதன் கூற்றுப்படி, இந்த ஆண்டு அவர் மொத்தம் 22 காவடிகளை உருவாக்கியுள்ளார். இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இதுவரை அவர் செய்த கூடுதலான எண்ணிக்கையாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச காவடிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது, என்றார்.
“வெட்டுதல், வரைதல் மற்றும் ஓவியம் தீட்டிதல் உட்பட ஒரு காவடியை வடிவமைக்கும் செயல்முறை சுமார் ஒரு வாரம் ஆகும். அதன் பாகங்களை ஒன்றாக இணைத்து முழுமையான காவடியை உருவாக்க சுமார் ஒன்று முதல் இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது.
“எனது வழக்கமான வாடிக்கையாளர்களிடமிருந்தும், டிக் டோக் எனும் சமூக வலைத்தள செயலி வாயிலாகவும் எனது காணொலிகளைப் பார்த்த பிறகு புதியவர்களிடமிருந்தும் எனக்கு ஆர்டர்கள் வந்தன.
இந்த ஆண்டு ஒரே வடிவமைப்புள்ள காவடிகளுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்ததாக பிரகலாதன் தெரிவித்தார். வடிவம் மாறாமல் நிறத்தை மட்டும் மாற்றி வாடிக்கையாளர்கள் கேட்டதாகவும் கூறினார். காவடிகளின் விலை ரிம800 முதல் ரிம1,200 வரை வடிவமைப்பைப் பொறுத்து இருக்கும், என்றார்.
சில வாடிக்கையாளர்கள் பல நிறங்களைப் பயன்படுத்துமாறு கோரினாலும், அதனால் செலவு அதிகரிக்கும் என்பதால் குறைந்த நிறங்களைப் பயன்படுத்துமாறு தாம் அறிவுறுத்துவதாக பிரகலாதன் தெரிவித்தார். காவடிகளின் வடிவமைப்பை பெரும்பாலும் தாமே செய்வதாகவும், நிறங்களை சில சமயம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதாகவும் அவர் கூறினார்.
காவடிகள் செய்யும் கைவினை ஆற்றலை கற்றுக்கொள்ள யாராவது அவரை அணுகியிருக்கிறீர்களா என்று கேட்டபோது, இதுவரை யாரும் அணுகவில்லை என்று பிரகலாதன் கூறினார்.
இருப்பினும், அவரது 10 வயது மகள் பி. சுபிக்ஷா ஏற்கனவே அந்தக் கைவினைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
“இந்தக் காவடி செய்யும் துறையில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளிப்பது எனது மகள்.
மாநில சுற்றுலா மற்றும் படைப்பு பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹான் வாய், கடந்த மூன்று ஆண்டுகளாக காவடிகளை ஒன்று சேர்ப்பதற்கான இடமாக எம்.பி.கே.கே பாயா தெருபோங் மண்டபத்தை வழங்கி, பிரகலாதனுக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில், பிரகலாதனுக்கு உதவுவதன் மூலம், தொழில்முனைவோரையும் தைப்பூசக் கொண்டாட்டத்தையும் ஊக்குவிக்க விரும்புவதாக வோங் கூறினார்.
காவடியைத் தயாரிக்கை பயன்படுத்தப்படும் பொருட்களில் ஸ்டைரோஃபோம், உலோகங்கள், பெயிண்ட், ஸ்ப்ரே ஆகியவை அடங்கும்.
“நாங்கள் அந்த இடத்தை கலை மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறோம், சமூக உணர்வையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
பிரகலாதனின் காவடி தயாரிக்கும் பணியில் தனிப்பட்ட முறையில் ஊக்குவித்து ஆதரவளிக்க வோங்
வருகையளித்தாகத் தெரிவித்தார்.
பிரகலாதன் தயாரிக்கும் கவடிகள் சுமார் 6 அடி உயரம் கொண்டவை என்றும், அவற்றின் எடை சுமார் 6 முதல் 7 கிலோகிராம் வரை இருக்கும் என்றும் அறியப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்து சமூகத்தால் கொண்டாடப்படும் முக்கிய மதப் பண்டிகைகளில் ஒன்றான தைப்பூசம், வரும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி,1 அன்று அனுசரிக்கப்படவுள்ளது.
பக்தர்கள் ஏந்தும் காவடி, முழங்கும் வேல் ஒலி மற்றும் “வேல்! வேல்!” கோஷங்கள், இந்த திருவிழாவை வழிபாடு அல்ல, சமூகத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.