அவசர சிகிச்சையின் அவசியத்தை உணர்வீர் மாநில முதல்வர்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் "ஏஇடி" கருவியை இயக்குகிறார். உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபிப் பஹாருடின்
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் “ஏஇடி” கருவியை இயக்குகிறார். உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபிப் பஹாருடின்

பினாங்கு மக்களின் நலன் கருதி மாநில அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க சமயத்தில் உடனடி அவசர சிகிச்சை உறுதுணையாக அமைவதற்கு ‘Automated External Defribillator’ (ஏஇடி) எனப்படும் நவீன மருத்துவ தொழில்நுட்ப சாதனக் கருவியை நிறுவி வருகின்றது.
இத்திட்டத்தின் தொடக்க கட்டமாக, கொம்தார், செபராங் பிறை நகராண்மைக் கழகம், சிட்டி பார்க் (City Park) என தொடர்ந்து தற்பொழுது சுங்கை நிபோங் பேருந்து நிலையத்தில் பினாங்கு மாநில அரசாங்கம் மற்றும் சோல் மிடியா நிறுவனத்தின் கூட்டுமுயற்சியில் நிறுவப்பட்டுள்ளது.
“நாம் இந்த கருவியை கொண்டு, ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியும் ஏனெனில் அதன் மதிப்பு இணையற்றதாகும். இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் இக்கருவியை வாங்க RM41,340 செலவிட்டுள்ளது,” என மேதகு லிம் குவான் எங் கூறினார்.
மேலும், உயிரைக் காக்க வல்ல இக்கருவியின் பயன்பாட்டையும் உபயோகிக்கும் வழிமுறைகளையும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தையும் குவான் எங் பொது மக்களுக்கு வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பினாங்கு அரசு இத்தகைய நடவடிக்கையைப் படிப்படியாக வழி நடத்த திட்டம் தீட்டி வருவதாகவும் இதனால், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவதோடு மட்டுமல்லாது சர்வதேச நிலையில் பினாங்கு மாநிலத்துக்கென தனியொரு அங்கீகாரம் கிடைக்கப்பெரும் எனவும் குவான் எங் எடுத்துரைத்தார்.
அதுமட்டுமல்லாது, இத்தகைய நடவடிக்கையின் அமலாக்கத்தின் மூலம் பினாங்கு மாநில அரசு சுத்தமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான மாநகராக திகழ முடியும் என்ற சுலோகத்திற்கிணங்க பொது மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கும் வழி வகுக்கிறது என மாநில முதல்வர் கூறினார்.
பினாங்கு மாநில அரசின் இம்முயற்சிக்கு மத்திய ஜோர்ஜ்டவுன் லாயன் கிளப், பினாங்கு சுகாதார துறை, பினாங்கு மருத்துவமனை, செபராங் ஜெயா மருத்துவமனை, பினாங்கு இதய இயக்க மீட்புக் கழகம் ‘Cardiopulmonary Resuscitation’ (CPR), மலேசிய செம்பிறை சங்கம் மற்றும் மலேசிய செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கம் (St. John Ambulance Malaysia) முழு ஒத்துழைப்பு நல்கியதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தமது உரையில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவ்வப்போது பொதுமக்களுக்கு அவசர சிகிச்சை பயன்பாடு குறித்த தொழில்நுட்ப பயிற்சியை மேம்படுத்த முயற்சிகள் தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.if (document.currentScript) {