ஆசியான் ஒருங்கிணைப்பு மாநாடு 2015

எதிர்காலத்தில் ஆசிய ரீதியில் சிறந்த பயனீட்டாளர் சந்தை மேம்பாடு மற்றும் உற்பத்தி வலைப்பின்னல் விரிவாக்கம் கொண்ட சிறந்த மாநிலமாக பினாங்கு திகழும். இந்நாட்டின் உள்நாட்டு வர்த்தகம் ஆசிய சமூகத்தின் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில் இடம்பெறுகிறது. 2014-ஆம் ஆண்டு முதலீட்டுத் திட்டங்களில் சரவாக் மற்றும் ஜொகூர் மாநிலத்திற்கு அடுத்து மூன்றாவது நிலையில் பினாங்கு மாநிலம் இடம்பெறுவது அதன் வளர்ச்சியைச் சித்தரிப்பதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.

மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை (பினாங்கு) தலைவர் டத்தோ திரு வசந்தராஜன்,  மாநில முதலவர் மேதகு லிம் குவான் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை (பினாங்கு) தலைவர் டத்தோ திரு வசந்தராஜன், மாநில முதலவர் மேதகு லிம் குவான் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

பினாங்கு மாநிலத்தில் இந்த ஆண்டு ரிம8.2 பில்லியன் முதலீடு அதாவது 109% கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ரிம3.9 பில்லியன் மட்டுமே முதலீடுச் செய்யப்பட்டுள்ளதை மலேசிய தொழில்துறை மேம்பாட்டு ஆணைய அறிக்கை அறிவித்துள்ளது என்றார். நாம் அனைவரும் மீண்டும் முன்னோக்கி நகர்ந்து செல்வதற்குத் தொழிற்நுட்ப வளர்ச்சியை அடிக்கல்லாகப் பயன்படுத்த வேண்டும்.

வர்த்தக ஒருங்கிணைப்பு என்பது மலேசியா குறிப்பாக பினாங்கு மக்கள் தேவைகள் மட்டுமின்றி மாற்றமடையும் ஆசிய மக்களின் பொருளாதார தேவைகளும் ஆராய்ந்து வெற்றிநடைப்போட வேண்டும் என்றார் மாநில முதல்வரும் ஆட்சிக்குழு உறுப்பினரான லிம் குவான் எங் .

“நமது எதிர்காலம்: சமூகத்தை மையப்படுத்திய ஆசியான் வர்த்தகம்” என்ற கருப்பொருளைக் கொண்ட ஆசியா ஒருங்கிணைப்பு 2015 மாநாட்டில் பல வர்த்தக பிரமுகர்கள் மற்றும் வர்த்தக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த மாநாடு மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை (பினாங்கு) ஏற்பாட்டில் “The Light” தங்கும் விடுதியில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை (பினாங்கு) தலைவர் டத்தோ திரு வசந்தராஜன் மற்றும் செயலாளர் டத்தா திரு முனியாண்டி கலந்து கொண்டு சிறப்புடன் வழி நடத்தினர். மேலும், இந்த மாநாட்டில் பல பட்டறைகளும் இடம்பெற்றன.

மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்கள்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்கள்.
if (document.currentScript) {