ஆரோக்கியம் & பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க முற்பட வேண்டும் – ஆலோசகர்கள் அறிவுறுத்தல்

Admin

ஜார்ச்டவுன் – வாழ்க்கையில் சில விஷயங்கள் மனிதர்களின் சுய கட்டுப்பாடு இன்றி செயல்படுகிறது.

தற்போது, இந்த உலகளாவிய மருத்துவ நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்த காலகட்டத்தில் தனது வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட பொதுவான பிரச்சனைகள் நிதி மற்றும் உணர்ச்சி முறிவுகள் என்று  ஆலோசகராக பணிபுரியும் 30 வயதான பிரையன் ஜான் துரை கூறினார்.

“நாம் ஒரு வரம்புக்குள்  செயல்படும் சூழ்நிலையை கடந்து செல்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இந்த சூழலை கடந்து செல்ல மன வலிமை கொண்டிருக்க வேண்டும். இச்சூழ்நிலை கடந்து செல்லும் என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

“கோவிட் -19 நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும் அதனை உங்களைச் சுற்றிலும் இருக்கும் தேவைகளை அதாவது  சமையல், யூடியூப் அலைவரிசை தொடங்குவது, உங்கள் பலத்தையும் ஆர்வத்தையும் பிற நன்மை பயக்கும் வழிகளில் பயன்படுத்துங்கள்.

“இந்த எஸ்.ஓ.பி-களை கடைப்பிடிப்பது கடினம் என நினைத்தால், உங்கள் நல்வாழ்விற்காக  அன்புக்குரியவர்கள் நிறைய பேர் அங்கே இருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

“அரசு சாரா நிறுவனங்கள்,உளவியலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் உங்களுக்குச் செவி சாய்க்க விரும்பும் நல்ல ஆத்மாக்களுடன் ஏதாவது பேச உங்களுக்கு தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

“வலுவான மன தைரியத்துடன் இருங்கள், இதனை வாழ்க்கையில் நாம் கடந்து செல்லலாம்,” என பிரையன் கூறினார்.

முழுநேர ஆலோசகராக பணிபுரியும்  கெல்லி-ஆன் பாப்டிஸ்ட், 47, கடந்த ஆண்டு மலேசியாவில் கோவிட் -19 தொற்று நோய் முதன் முதலில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியதிலிருந்து, அவர் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அதாவது உயர் தொழில் வல்லுநர்கள்,  தொழிலாளர்கள் மற்றும்  இளைஞர்கள் உட்பட எண்ணற்ற ஆலோசனை சேவைகளை வழங்கியுள்ளார்.

“இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் மக்கள் மிகவும் கவலையுடன்,  பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்துள்ளனர்.

“சரிபார்க்கப்படாத மற்றும் போலி செய்திகளுக்கு செவிசாய்ப்பதன் வாயிலாக, தேவையற்ற கவலையான தருணங்களை நமக்குள் உருவாக்க நேர்கிறது .

ல்ல்ல்ல்”நான் பேசிய எனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர், தவறான காரணங்களுக்காக மன உளைச்சல் மற்றும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

“இதுபோன்ற ஒரு காலகட்டத்தில், நாம் அனைவரும் செய்ய வேண்டியது அமைதியாக இருக்க வேண்டும்; எதையும்  சமூக ஊடக தளங்களில் பரப்பாமல் இருத்தல் வேண்டும்; ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றுவது மற்றும் மிக முக்கியமாக, வீட்டிலேயே இருங்கள் மற்றும் தேவைப்படும் போது மட்டும் சொல்லுங்கள் என கெல்லி அறிவுறுத்தினார்.

“தொற்றுச் செய்திகளில் இருந்து மன உளைச்சலுக்கு ஆட்கொள்ளாமல், உங்கள் மனதை வலிமையுடன் கொண்டு அதிக உடற்பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். மேலும், பத்திரிகைகள் எழுதுதல், வர்ணம் தீட்டுதல், வரைதல், தோட்டம், தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சல் போன்றவை சிறந்த நடவடிக்கைகளாக அமையும், ” என கெல்லி  பிரத்யேக தொலைபேசி நேர்காணலின் போது முத்து செய்திகள் நாளிதழிடம்  கூறினார்.

கெல்லியுடன் பேச அல்லது  ஆலோசனை அமர்வுக்கு  பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் அவரை 013-4691945 என்ற எண்களில் அல்லது https://www.facebook.com/Kelly-Ann-Baptist-Counseling-107951387669475 எனும் முகநூலை அணுகலாம்.