புக்கிட் மெர்தாஜாம் சந்தையை சேர்ந்த 71 பேர் திரையிடலுக்கு உட்படுத்தப்படுவர் – ரோசாலி

Admin

புக்கிட் மெர்தாஜாம் – மூன்று கோவிட் -19   வழக்குகள் சமீபத்தில் பதிவாகியது தொடர்ந்து புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தை மூடப்பட்டது. எனவே,மத்திய செபராங் பிறை சுகாதார மாவட்ட அலுவலகத்தில்
இதன் தொடர்பாக  71 நெருங்கிய தொடர்புகள் கொண்ட வியாபாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் கூறுகையில், சுகாதார மாவட்ட அலுவலகம் நேற்று 25 நபர்களுக்கும், இன்று கூடுதலாக 46 பேருக்கும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இச்சந்தை மே,31 முதல் ஜூன்,8 வரை மூடப்படும்.

வணிகர்கள் தங்கள் சொந்த நலனுக்காகவும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காகவும் ஒத்துழைத்து திரையிடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ரோசாலி கேட்டுக்கொண்டார்.

காய்கறி மொத்த விற்பனையாளரான ஒருவர், அனுமதியின்றி தனது பொருட்களை இறக்குவதற்காக சந்தையில் நுழைந்ததற்காக பிடிபட்ட பின்னர், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வணிகர்களை எச்சரித்தார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விதிமுறைகளைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்  உட்படுத்தப்பட்ட விதி மீறலுக்காக அந்த வியாபாரிக்கு ரிம 5,000 அபராதம் விதித்துள்ளது.

அந்த வியாபாரிக்கு இரண்டு கூடுதல் அபராதங்கள் வழங்கப்பட்டன, ஒன்று சந்தையில் நுழைவதற்கு முள்வேலியை அகற்றுவதற்கும், மற்றொன்று தனது பொருட்களை சந்தையின் நடைபாதையில் வைத்து இடையூறு வழங்குவதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

“இந்த சந்தையில் வியாபாரம் செய்த வர்த்தகர்கள் ஜாலான் பசார் மற்றும் ஜலான் பூங்கா ராயா பகுதி சாலையோரங்களில் விற்பனை செய்ய முடியாது என்று எச்சரிக்கைபடுகிறார்கள்.  ஆனால், சந்தைக்கு வெளியே விற்பனை செய்த வியாபாரிகள் அனுமதிக்கப்படுகிறார்கள், ” என்று ரோசாலி இன்று எம்.பி.எஸ்.பி முகநூல் நேரலை வாயிலாக செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

ஜூன் 1 முதல் 14 வரை தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்த ஒவ்வொரு எஸ்.ஓ.பி-களையும் பினாங்கில் உள்ள அனைத்து சமூகத்தினரும், குறிப்பாக செபராங் பிறையில்  உள்ள வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களும் பின்பற்றுவதை  உறுதிப்படுத்த, வரைப்படம் மூலம் சுருக்கமாக விவரிக்க எம்.பி.எஸ்.பி முயற்சி எடுத்துள்ளது என்று ரோசாலி மேலும் கூறினார்.

அத்தியாவசிய சேவைகள் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மற்றும்  எம்.பி.எஸ்.பி உரிமங்களைக் கொண்ட செபராங் பிறை  வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் சிறு வணிகங்கள் அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் (மித்தி) ஒப்புதல் கடிதங்களைப் பெறாமலே செயல்பட முடியும் என்று ரோசாலி மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.