ஆ.குமரேசன் கிண்ண காற்பந்து போட்டி தரமான விளையாட்டாளர்களை உருவாக்க இணக்கம் – சட்டமன்ற உறுப்பினர்

Admin

பத்து உபான் – ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே காற்பந்து போட்டியில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிகொணரும் நோக்கில் பத்து உபான் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் ஆ.குமரேசன் கிண்ண காற்பந்து போட்டி அறிமுக விழாவை அதன் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இப்போட்டி விளையாட்டினை பத்து உபான் சட்டமன்ற சேவை மையமும் பாடாங் போலோ கேளிக்கை விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது பாராட்டக்குரியதாகும்.

தேதி: 10 நவம்பர் 2018 (சனிக்கிழமை)
நேரம்: காலை 8.00 தொடங்கி மாலை 6.00 வரை
இடம் : பினாங்கு அறிவியல் பல்கலைக்கழக மைதானம் ‘A’ & ‘A1’ (பினாங்கு விளையாட்டு மன்றம் முன்புறம்)

ஆ.குமரேசன் கிண்ண காற்பந்து போட்டியின் பிரச்சூரம்

இக்காற்பந்து போட்டிக்கு இதுவரை பினாங்கு, கெடா, பேராக், கிளாந்தான் மற்றும் கோலாலம்பூரில் இருந்து 24 குழுக்கள் இதுவரை பதிவுச் செய்துள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டிக்கு 32 குழுக்கள் பங்கேற்கும் நோக்கில் இன்னும் பங்கேற்கவிரும்பும் குழுக்கள் இப்போட்டியின் ஏற்பாட்டு குழுத் தலைவர் பாசி (0174382117) என்ற எண்களில் தொடர்புக்கொள்ளலாம்.

இதனிடையே, ஆ.குமரேசன் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் நிலை வெற்றியாளருக்கு ரிம1,200 ரொக்கப்பணம், சான்றிதழ் மற்றும் கேடயத்தை பரிசாக வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் குறிப்பிட்டார். இதனிடையே, இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்பது பாராட்டக்குரியதாகும்.

மேலும், இச்சுழற்கிண்ணப் போட்டி தொடர்ந்து வருங்காலங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, பத்து உபான் தொகுதியில் காற்பந்து கல்வி மையத்தையும் அமைக்க தாம் இணக்கம் கொண்டுள்ளதாக செய்தியாளர்களிடம் விவரித்தார். மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் ஈடுப்படுவதன் மூலம் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடுவதோடு பினாங்கின் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.