இந்தியர்களின் ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் பாதுகாக்கப்படும் – மாநில முதல்வர்

Admin

பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7ஏ பெற்ற மாணவர்களுக்கு ரிம100 மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வை திரு காளியப்பன் தலைமையில் ஜாலான் செம்பாடான் ஜனநாயக செயற்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். யூ.பி.எள்.ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடுச் செய்யப்பட்டது. ஆயர் பூத்தே தொகுதியைச் சார்ந்த 26 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் 1: மாநில முதல்வர் ஆலய பொருளாளர் திரு ஆறுமுகத்திடம்   காசோலை வழங்கினார்.
படம் 1: மாநில முதல்வர் ஆலய பொருளாளர் திரு ஆறுமுகத்திடம் காசோலை வழங்கினார்.

இந்நிகழ்வு ஶ்ரீ அம்பகத்தூர் காளியம்மன் ஆலயத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் சிறப்பு வருகை புரிந்த மாநில முதல்வர் இந்தியர்களின் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்கள் தொடர்ந்து பராமரிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்காக தனது நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரிம10,000-கான காசோலையை ஆலயப் பொருளாளர் திரு ஆறுமுகத்திடம் வழங்கினார். அதுமட்டுமின்றி தனது தொகுதியில் அமைந்திருக்கும் இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கும் ரிம10,000கான காசோலையை அப்பள்ளியின் துணை தலைமையாசிரியர் திரு முனியாண்டியிடம் வழங்கினார். அன்றைய தினத்தில் திரு விஸ்வநாதன் சார்பில் சுவாமி ஐயப்பன் மண்டலகால பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசியர்கள் குறிப்பாக பினாங்கு வாழ் மக்கள் அடுத்த வருடத்தில் இடம்பெறும் பொருள் சேவை வரியை மேற்கொள்வதௐசுத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். இந்த வரியைச் செலுத்த குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் இன்னலுக்கு ஆட்கொள்வர் எனத் தனது வரவேற்புரையில் மாநில முதல்வர் தெரிவித்தார். மேலும் கூட்டரசு அரசு தொடக்கத்தில் வடக்குதெற்கு நெடுஞ்சாலை மற்றும் பாலங்களுக்கு இந்த வரி விதிக்கப்பட மாட்டாது என அறிவித்தது. ஆனால் இன்றைய நிலையில் பினாங்கு முதலாம், இரண்டாம் பாலத்திற்கும் முறையே 6% வரி விதிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளதைக் சுட்டிக்காட்டினார். இதனால் பினாங்கு வாழ் மக்களின் செலவினங்கள் அதிகரிக்கும் எனத் தெளிவுப்படுத்தினார்.

படம் 2: யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்தய மாணவர்கள்
படம் 2: யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்தய மாணவர்கள்