இவ்வாண்டு சர்வ தேச மகளிர் தினக் கருப்பொருள் “சமத்துவ உறுதிமொழி”

 2015-ஆம் அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம்
2015-ஆம் அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம்

பெண்கள் பல ஆண்டு காலமாக சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்று போராடியுள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகளைப் பெற, வேலைக்கேற்ற ஊதியம் மற்றும் வாக்குரிமை பெற கிளர்ச்சிகளில் ஈடுப்பட்டனர். இப்பெண்களின் உரிமைப் போராட்டங்களின் பலனாக பெண்களும் வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறவும் மார்ச் 8-ஆம் நாள் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மார்ச் 8-ஆம் நாளே சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றுத் தொடங்கிய போராட்டம் இன்று வரை பெண் உரிமைக்காகத் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. காலத்தின் தேவைக் கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர். இந்த ஆண்டின், மார்ச் 8-ஆம் தேதி சர்வ தேச மகளிர் தினக் கொண்டாட்டக் கருப்பொருள் ”சமத்துவ உறுதிமொழி” (PLEDGE FOR PARITY)
பெண்கள் அரசியல் , பொருளாதாரம், சமூகக் கலாச்சாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் மேம்பாடு அடைய ஆண் பெண், ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமின்றி ஒவ்வொருவரின் திறன் மற்றும் உரிமை குறிப்பாக பொது மற்றும் தனியார் துறைகளில் நிலை நிருத்தப்படுவதை உறுதிச்செய்யவும். பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தூண்டுக்கோளாக அமையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் அறிவுத்திறன், வருமானம் மற்றும் தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ள வழி வகுக்கிறது.
இளைஞர் & விளையாட்டு, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சொங் எங் அவர்களின் தலைமையில் இயங்கும் இக்கழகம் மகளிருக்கு முக்கியத்துவம், சமத்துவம் மற்றும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி இவ்வாண்டு இரு நகராண்மைக் கழகங்களிலும் பெண் பிரதிநிதிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் வெற்றியடைந்துள்ளது.
இவ்வாண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பெண்களுக்கானப் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்துள்ளது. இந்நிகழ்வுகள் , மகளிரின் மேம்பாடு, சமத்துவம், விழிப்புணர்வு, பொருளாதாரம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளாக அனைத்து இனத்தவர்களுக்கும், குறிப்பாக நான்கு மொழிகளிலும் நடத்தப்படும்