“நாங்கள் வல்லமைமிக்க அணி”- திரு ராம் கர்பால்

சாதனைப் புரிந்த இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால்.
சாதனைப் புரிந்த இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால்.

ஒவ்வொரு ஆண்டும் ஶ்ரீ டெலிமா தொகுதி புவா பாலா குடியிருப்புப் பகுதியில் பொங்கல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். அண்மையில் இவ்விழா கஸ்தாம் கிராம திடலில் இடம்பெற்றது. லெங்கோக் பாவா சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா பல கலாச்சார மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றது. உறி அடித்தல், கோலம் போடுதல், பொங்கல் வைத்தல், மயிலாட்டம், பரத நாட்டியம் ஆகிய கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளுடன் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். “நாங்கள் வல்லமைமிக்க அணி” என பெருமிதத்துடன் கூறினார் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பொது மக்களின் உரிமைகள் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். மேலும் ஶ்ரீ டெலிமா தொகுதியின் அபார வளர்ச்சிக்கு அதன் சட்டமன்ற உறுப்பினரான திரு நேதாஜி இராயரே காரணம் எனப் புகழ்மாலை சூட்டினார்.
இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் துறையில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருவதை கெளரவிக்கும் பொருட்டு அம்மாணவர்களுக்கு கேடயம், வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. சீனாவில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் விழாவில் தங்கம் வென்ற ஶ்ரீ.துர்காஷினி, பொ.குமுதாஶ்ரீ, க.சுகேசன் மற்றும் ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற அனைத்துலக அறிவியலாளர் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற உஷா சந்திரிகா விஜேந்திரன், கெலின் எவ்லின் தோமஸ், ஷாலினி பிரியங்கா கண்ணன், வைஷ்ணவி சந்திரசேகரன் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர். மேலும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 10 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அங்கீகரிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி 100 வசதி குறைந்த பொது மக்களுக்குப் பரிசுக்கூடை வழங்கப்பட்டன.

பாரம்பரிய நடனம்.
பாரம்பரிய நடனம்.

இந்நிகழ்வு பொங்கல் விழாவாகவும் இந்திய தலைமுறையினரை கெளரவிக்கும் அரங்கமாகவும் திகழ்ந்தது. பொது மக்களுக்கு இந்திய பாரம்பரிய சைவ உணவு பரிமாறப்பட்டது.if (document.currentScript) {