எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கு அவசர கால பயிற்சி வழங்குவது அவசியம்

ஜார்ச்டவுன் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற தொகுதியின் நான்கு சட்டமன்ற சேவை மையத்தைச் சேர்ந்த கம்போங் நிர்வாக செயல்முறை கழகத்தின் (எம்.பி.கே.கே) 62 உறுப்பினர்கள் அவசர பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த அவசர பயிற்சி திட்டம் பினாங்கு மாநகர் கழக ஏற்பாட்டில் இனிதே நடைபெற்றது.

இத்திட்டம் கெபுன் பூங்கா சட்டமன்ற சேவை மையம், செப்பிறைச் சங்கம் மற்றும் பினாங்கு தீயணைப்புப் படை ஒத்துழைப்பில் கருத்தரங்கு, ‘Cardio Pulmonary Resuscitation (CPR) கருவி பயன்படுத்தும் அணுகுமுறை மற்றும் தீயணைக்கும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது.

இத்திட்டம் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்காகப் பிரத்தியேகமாக ஏற்பாடுச் செய்யப்பட்டதாக மாநகர் கழக உறுப்பினர் காளியப்பன் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சி கற்றுக்கொடுப்பதன் மூலம் அவசர காலங்களில் எம்.பி.கே.கே உறுப்பினர்கள் அவசார காலத்தில் பொது மக்களுக்கு சற்றும் காலம் தாழ்த்தாமல் உதவும் நோக்கத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்டது. இதன் மூலம் எம்.பி.கே.கே உறுப்பினர்கள் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் பெறுவர்,” என காளியப்பன் கூறினார்.

வருங்காலங்களில் எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கு மேலும் பயனுள்ள திட்டங்கள் செயல்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக காளியப்பன் கூறினார். ஏனெனில், எம்.பி.கே.கே உறுப்பினர்களே அவசர காலங்களில் பொது மக்களுக்கு உடனடி உதவி மற்றும் சேவை வழங்குகின்றனர் என்பது மறுப்பதிற்கில்லை என்றார்.