ஒரே மலேசிய வீடமைப்புப் பராமரிப்பு நிதியுதவி திட்டம்(TP1M) தொடருமா? திரு ஜெக்டிப்

காசோலை பெற்றுக் கொண்ட அடுக்குமாடி வீடமைப்பு நிர்வாக பொறுப்பாளர்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ.
காசோலை பெற்றுக் கொண்ட அடுக்குமாடி வீடமைப்பு நிர்வாக பொறுப்பாளர்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ.

கூட்டரசு அரசாங்கம் ஒரே மலேசிய வீடமைப்புப் பராமரிப்பு நிதியுதவி திட்டம்(TP1M) மூலம், மலிவு விலை வீடுகளுக்கு 90% மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு 70% நிதியுதவி வழங்குகிறது. மீதமுள்ள 10% மற்றும் 30% செலவினங்களை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே பொது மக்களின் செலவினங்களைக் குறைக்கும் பொருட்டு மாநில அரசு பினாங்கு வீடமைப்புப் பராமரிப்பு நிதியுதவி திட்டம் (HAPPY, Yes) மூலம் 10% மற்றும் 30% செலவினங்களை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

11-வது மலேசிய திட்டத்தில் நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் இராசாக் “TP1M”-திட்டத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. எனவே, இத்திட்டம் தொடரப்படுமா என அஞ்சப்படுகிறது. கூட்டரசு அரசாங்கம் நடுத்தர அடுக்குமாடி மற்றும் மலிவு விலை அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும் பராமரிப்பு நிதியுதவித் தொடரப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்குமாறுக் கேட்டுக் கொண்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் சிங்.

பினாங்கு மாநில அரசு 2013-ஆம் ஆண்டு தொடங்கி (TP1M)-என்ற கூட்டரசு அரசாங்கத்தின் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு விண்ணப்பம் செய்த 144 விண்ணப்பங்களில் 26 மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன. “TP1M” திட்டம் நிராகரிக்கப்பட்டால் பொது மக்கள் வீடமைப்புப் பராமரிப்புப் பணி மேற்கொள்ள முடியாமல் துன்புறுவர்.
மாநில அரசு “HAPPY, Yes” திட்டத்தின் மூலம் 10 அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள ரிம1,705, 155.50 ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9/7/2015-ஆம் நாள் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்த 10திட்ட பராமரிப்புப் பணியை மேற்கொள்ள காசோலை வழங்கினார் திரு ஜெக்டிப். காசோலை பெற்றுக் கொண்ட பொறுப்பாளர்கள் மாநில அரசிற்கு நன்றிக் கூறினர்.} else {