ஒற்றுமை நடைப்பயணம் 2019

பத்து காவான் – “நாம் அனைவரும் மதம், இனம், மொழி வேறுபாடின்றி மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும். அண்மையக் காலமாக பலதரப்பட்ட சர்ச்சைகள் இனவாத்தைத் தூண்டுகிறது. எனவே, மலேசியர்கள் தேசப்பற்றுடன் பல்லின மக்களுடனான ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். எனவே, பொது மக்களிடைய தேசப்பற்று ஓங்குவிக்கும் வகையில் ஒற்றுமை நடைப்பயணத்தில் அனைவரும் கலத்து கொள்ள வேண்டும்,” என ஒற்றுமை நடைப்பயண விழா குறித்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு இவ்வாறு தெரிவித்தார்.

பினாங்கு மாநில அரசு மத சுதந்திரத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கூடிய விரைவில் ஹர்மோனி கட்டடம்நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பல்லின மக்களின் மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்த பிரதான தலமாகவும் திகழும், என்றார்.

பத்து காவான் நாடாளுமன்ற சேவை மையம், ஆட்டோ சிட்டி நிறுவன இணை ஏற்பாட்டில் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெறவிருக்கிறது. இந்த ஒற்றுமை நடைப்பயணம் மலேசியத் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி ‘Skytv Autocity’ தலத்தில் இடம்பெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பங்கேற்பாளர்கள் பத்து காவான் சேவை மையத்தில் பதிவுச்செய்யலாம் அல்லது ‘Unity walk’ எனும் முகநூல் அகப்பக்கத்தையும் அணுகலாம். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் பல்லின மக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

ஒற்றுமை நடைப்பயணம் என்ற தலைப்புக்கு ஏற்ப அனைத்து பங்கேற்பாளர்களும் பாரம்பரிய உடையில் கலந்து கொள்ள வேண்டும். இவ்விழாவில் ஏறக்குறைய 500 பங்கேற்பாளர்கள் பங்குக்கொள்வர் என எதிர்ப்பார்ப்பதாக,” கஸ்தூரி கூறினார்.

இவ்விழா காலை மணி 6.00-க்கு தொடங்கி 10.30-க்குள் நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் 5 கிலோ மீட்டர் நடைப்பயணத்தில் கலந்து கொண்டப்பிறகு தொடர்ந்து இடம்பெறும் அதிர்ஷ்ட்டக்குலுக்களில் கலந்து கொண்டு பரிசைப் பெற்றுக்கொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக சட்டை வழங்கப்படும்.