கம்போங் நானாஸ் மக்களுக்கு நிரந்தர நில உரிமை -முதல்வ

“நான் பினாங்கை நேசிக்கிறேன்” எனும் பிரச்சுரத்தை கம்போங் நானாஸ் நிரந்தர நில உரிமை பத்திரம் பெற்ற பொது மக்கள், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள் காண்பிக்கின்றனர்.

37 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கம்போங் நானாஸ் குடியிருப்பு மக்களுக்கு நிரந்தர நில உரிமை பத்திரம் வழங்கப்பட்டது. நம்பிக்கை கூட்டணி அரசு 37 மாத கால வரையறைக்குள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுக்கண்டது என அகம் மகிழ தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

குடிமக்கள் 37 ஆண்டுகளுக்கு முன்பு 80 லோட் கொண்ட 4 ஏக்கர் நிலத்தை வாங்கினர் இருப்பினும் இன்று தான் அந்நிலத்திற்கான நிரந்தர நிலவுரிமை பெற்றனர் என்றார்.

கம்போங் நானாஸ் குடிமக்கள் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு உரையாற்றுகையில் 36 குடும்பங்களுக்கு இன்று நிரந்தர நில உரிமை வழங்குவதற்கு பினாங்கு மாநிலத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அதிகாரம் கொண்டுள்ளது என எடுத்துரைத்தார்.

நெனாஸ் நிரந்தர நில உரிமை பத்திரம் பெற்ற திருமதி மனோஹரி மற்றும் அவரது மகள் ஜெய பவானி.

அண்மையில் கூட்டரசு அமைச்சர் பினாங்கு மாநிலத்தை கூட்டரசு மாநிலமாக உருமாற்றம் செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தினார். “கூட்டரசு அரசாங்கமாக உருமாற்றம் கண்டால் பினாங்கு மக்கள் மாநில அரசாங்கத்தை வழிநடத்த தலைவர்களை தேர்ந்தெடுக்க அனுமதி வழங்கப்படாது; மாநில நிலத்தின் மீது அதிகாரமும் வழங்கப்படாது. எனவே, இன்று மாநில அரசாங்கம் மக்களுக்காக வழங்கிய நில உரிமை பத்திரம் வழங்க முடியாதுஎன கஸ்தூரி பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தியதோடு வருகின்ற 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை தேர்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

2014-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மாநில அரசு இந்நிலத்திற்கான உரிமம் 60 ஆண்டுகள் அல்லது 90 ஆண்டுகள் என வழங்கியது. மேலும் இந்நிலத்திற்கான வரி 100% என நிர்ணயிக்கப்பட்டது. அந்த ஆண்டு இறுதியில் பொது மக்கள் மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து நிலத்திற்கான மதிப்பீட்டு வரி 10% என அறிவிக்கப்பட்டது.

பொது மக்கள் விண்ணப்பத்திற்கு ஏற்ப மாநில நம்பிக்கை கூட்டணி அரசு குத்தகை முறையில் வழங்கப்பட்ட அந்நிலத்திற்கு நிரந்திர உரிமை வழங்கி பொது மக்களை இன்பக் கடலில் மூழ்கடித்தது.

இந்நிலத்தைப் பயன்படுத்தி மாநில அரசு பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளலாம் , இருப்பினும் பொது மக்களின் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்குகிறது என அப்துல் மஸ்ஜிட் தெரிவித்தார்.

தனித்து வாழும் தாயாரான திருமதி மனோஹரி,63 மாநில அரசு பல்லின மக்களின் நன்மைக்காக முக்கியத்துவம் வழங்குகிறது என்றார்.

இந்நிலத்தை வாங்கி 35 ஆண்டுகள் ஆயின, இருப்பினும் நிரந்திர உரிமை பெற்றதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்”” .”

இக்கிராமத்தில் பல்லின மக்கள் வசிப்பதாகவும் மாநில அரசின் செயல்பாடு பொது மக்களுக்கு நன்மை அளிக்கிறது என மேலும் தெரிவித்தார் அவரின் மகளான ஜெயபவானி,22.