கியோஸ் இயந்திரம் மூலம் மதிப்பீட்டு வரி செலுத்தலாம் – டத்தோ ரோசாலி

கியோஸ் இயந்திரத்தின் பயன்பாட்டினை செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் பொறியியலாளர் ரோசாலி ஜபார் எடுத்துரைத்தார்

செபராங் பிறை நகராண்மை கழகம் அவ்வட்டார மக்கள் இலகுவான முறையில் மதிப்பீட்டு வரியை செலுத்தும் நோக்கில் 10 கியோஸ் இயந்திரங்கள் (Mesin Kiosk) செபராங் பிறை நகராண்மைக் கழகம் மற்றும் ஜாலான் பெத்தே கிளை, கம்போங் ஜாவா மற்றும் ஜாவி வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

பினாங்கு பெருநிலத்தில் வாழும் மக்கள் மதிப்பீட்டு வரி செலுத்த வரிசையில் நின்று பல மணி நேரம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை மாறாக ஒரு நிமிடம் செலவிட்டால் மதிப்பீட்டு வரி செலுத்த போதுமானது என செபராங் பிறை நகராண்மைக் கழக மாதாந்திர கூட்டத்தொடருக்கு பின்னர் இந்த கியோஸ் இயந்திரத்தை தொடக்கி வைத்தார் அதன் தலைவர் பொறியியலாளர் டத்தோ ரோசாலி ஜபார்.

இந்த கியோஸ் இயந்திரத்தின் மூலம் பொதுமக்களின் நேரம் சேமிக்கப்படுவதோடு மதிப்பீட்டு வரி கட்டணமும் குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த சிறந்த துணையாக அமையும் என மேலும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்வின் போது செபராங் பிறை நகராண்மைக் கழகச்

செயலாளர் பொறியியலாளர் ரோஸ்னானி முகமது உடன் கலந்து கொண்டார்.