குடியுரிமை திட்டத்திற்கு முன்னுரிமை- பேராசிரியர்

மாநில இரண்டாம் துணை முதல்வர்  காசோலையை திருமதி முனியம்மாவிடம் வழங்கினார்
மாநில இரண்டாம் துணை முதல்வர் காசோலையை
திருமதி முனியம்மாவிடம் வழங்கினார்

பினாங்கு மாநிலத்தில் நிலவும் குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு மாநில அரசின் கீழ் இயங்கும் குடியுரிமை சிறப்பு குழுவின் முயற்சியால் மீண்டும் ஜாவி பல்நோக்கு மண்டபத்தில் குடியுரிமை திட்ட மக்கள் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ.
மேலும், இந்நிகழ்வில் வாக்காளர் பதிவு, சமூகநல உதவி, குடிநுழைவுத் துறை தொடர்பான அலுவல்கள், அனைத்து தங்கத் திட்டங்களிலும் பதிவுச் செய்தல், பினாங்கு வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் ஏற்பாடுச் செய்யப்பட்டன. இத்திட்டம் பினாங்கு மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் பேராசிரியர். இரண்டாவது முறையாக குடியுரிமை சிறப்பு குழுவின் முயற்சியில் இந்நிகழ்வு நடைபெறுவதாகப் புகழாரம் சூட்டினார் பேராசிரியர்.
மேலும், மாநில இரண்டாம் துணை முதல்வர் திருமதி முனியம்மா எனும் பெண்மணிக்கு செயற்கை கால் பொருத்த ரிம2,000 மானியம் வழங்கினார். தெற்கு செபராங் பிறை மாவட்டத்தில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்விற்கு பொது மக்கள் கலந்து கொண்டு நன்மை அடைந்தனர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);