குழந்தை பராமரிப்பு மையங்களை மேம்படுத்துவதற்கு ஆண்டுதோறும் ரிம300,000 மானியம் – சோங் எங்

Admin

 

ஜார்ச்டவுன் – மாநில அரசு குழந்தை பராமரிப்பு மையங்களை மேம்படுத்த ஓர் ஆண்டுக்கு ரிம300,000 மானியம் என 2023 ஆம் ஆண்டு வரை என மூன்று ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்குகிறது.

சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்,
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், மாநில அரசு 11 குழந்தை வளர்ப்பகம் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களின் விண்ணப்பங்களுக்கு மொத்தம் ரிம194,138.98 மானியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மானியம் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும், பராமரிப்பு மையங்களின் சேவை மற்றும் தரத்தை மேம்படுத்துவும் உதவுகிறது,” என்று சோங் எங் கூறினார்.

இம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத
குழந்தை வளர்ப்பகம், பாலர்ப்பள்ளிகள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கையும், அதேவேளையில் பதிவு செய்யாத மையங்களை பதிவு செய்ய மாநில அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சோங் எங், 123 பதிவுப்பெற்ற குழந்தை பராமரிப்பு மையமும் 45 பதிவுப்பெறாதவை 461 பதிவுப்பெற்ற பாலர்ப்பள்ளி, 86 பதிவுப்பெறாதவை; முதியோர்களுக்கான பதிவு செய்யப்பட்ட மையங்கள் 28 மற்றும் 56 பதிவுப்பெறாதவை உள்ளன, என்றார்.

“மாநில அரசு, மாநில சமூகநலத் துறை மற்றும் மாநிலக் கல்வித் துறை மூலம், பதிவு செய்யப்படாத மையங்களின் நடத்துநர்கள் உடனடியாகப் பதிவுசெய்வதற்கும், செயல்பாட்டில் உள்ள சட்டம், விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யவும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

“பதிவு செய்யாத நடத்துநர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக, மாநில சமூகநலத் துறையானது, MyKendiri அமைப்பு மூலம் பராமரிப்பு மைய நடத்துநர்களால் சுய மதிப்பீடு செய்யப்படுவதையும் உறுதி செய்கிறது.

குமரேசன், பதிவு செய்யப்படாத முதியோர் இல்ல நடத்துநர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதாகக் கூறினார். ஏனெனில், தனது தொகுதியில் உள்ள முதியோர்களுக்கான உரிமம் பெறாத பராமரிப்பு மையங்களில் அவர்களுக்கு தடுப்பூசிப் போட ஏற்பாடு செய்யாததால்
அதிகரித்த கோவிட்-19 வழக்குகளை மேற்கோள் காட்டி, இவ்வாறு எடுத்துரைத்தார்.

சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பிலும் குறிப்பிட்ட அவர், இதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பதிவு செயல்முறை தொடர்பான தகவல்களை வழங்கவும், உரிமம் பெறாத உரிமையாளர்களுடன் மாநில அரசு விளக்கக்கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் அமர்வை நடத்தப்படும் என்று சோங் எங் கூறினார்.

மாநில அரசு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சம்பந்தப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, உரிமம் இல்லாத மையங்களை உடனடியாக மூட உத்தரவு வழங்க முடியாத சூழலில் இந்தப் பிரச்சனையைக் கவனமாகக் கையாளப்படுகிறது, என்றார்.

“மையங்களை மூடினால் அவர்களை எங்கே அனுப்புவது? இது விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்காத வணிக நிறுவனங்களிலிருந்து பொருட்களை பறிமுதல் செய்வது போன்றது அல்ல,” என்று அவர் விளக்கமளித்தார்.

பாலர்ப்பள்ளி ஆசிரியர்களின் திறன்கள் மற்றும் கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்த, Whitehouse Education Group Sdn Bhd Preschooleducator.com என்ற இயங்கலை கற்பித்தல் தலத்தை உருவாக்கியுள்ளது, என்றார்.

“முதல் 1,000 நபர்களுக்கான கட்டணத்தை நிதியளிக்க மாநில அரசு Whytehouse உடன் இணைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“தனது அலுவலகம், மாநில சமூகநலத் துறை, பினாங்கு மாநகர் கழகம், பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்து மே 17-19 அன்று பினாங்கில் பதிவு செய்யப்படாத தொழில்முனைவர்களுடன் ஆலோசனை சேவையை நடத்தியது.

தற்போதுள்ள 41 குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் 62 முதியோர் பராமரிப்பு மையங்களில், 21 குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் 34 முதியோர் பராமரிப்பு மையங்கள் பதிவு செய்ய பரிசீலிக்கத் தகுதி பெற்றுள்ளன.

ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், பதிவு செய்ய சிக்கலை எதிர்நோக்குபவர்களுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் விளக்கம் மற்றும் வழிகாட்டிகள் வழங்கப்பட்டதாக விளக்கமளித்தார்.