சாங் இயாவ் மாநில அரசிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்- ஜெக்டிப்

திரு ஜெக்டிப் தாமான் மங்கீஸ் நிலம் குறித்த தகவல் கூறினார்.
திரு ஜெக்டிப் தாமான் மங்கீஸ் நிலம் குறித்த தகவல் கூறினார்.

தெங் சாங் இயாவ், “தேசிய முன்னணி அரசு வடகிழக்கு தாமான் மங்கீஸ் நிலப்பகுதியில் அமைந்துள்ள லோட் 314 மற்றும் 305 இடத்தில் மக்கள் வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ள எண்ணம் கொள்ளவில்லை” என்பதை மறுக்கவில்லை என்றார். இக்கூற்றை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ.
இவ்விவகாரம் தொடர்பாக, பினாங்கு மாநில தேசிய முன்னணி தலைவருமான சாங் இயாவ் வெளியிட்ட தவறான செய்தியால் மாநில அம்னோ உறுப்பினர்கள், அரசு சாரா இயக்கங்களான “பெர்காசா” மற்றும் “பாஜு மேரா” ஆகிய தரப்பினரால் ஆர்பாட்டங்கள் நடந்ததால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சவால் விடுத்தார் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினறுமான திரு ஜெக்டிப்
“இந்நிலப்பகுதியில் மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்குப் பதிலாக கலப்பு திட்டம் அறிமுகம் செய்ததையும் மறைத்துள்ளார். மேலும், தாமான் மங்கீஸ் நில மதிப்பீடு ரிம22.4 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார், ஆனால் மதிப்பீடு மற்றும் சொத்து சேவை துறை அதன் மதிப்பீடு ரிம8.5லட்சம் என உறுதிப்படுத்தியுள்ளது. “மேற்கண்ட தவறான கூற்றுக்கும் மன்னிப்புக் கோர வேண்டும். கடந்த 31/3/2016-ஆம் நாள் வரை தெங் இயாவ் தவறான தகவல்கள் வெளியிட்டதற்கு மாநில அரசிடம் மன்னிப்புக் கேட்கவில்லை மாறாக பல சாக்குப்போக்குகள் தெரிவித்தார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நிலத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம் அமைக்கப்படும் எனக் கூறியும் தேசிய முன்னணி அரசு ஏன் தொடரவில்லை என வினவினார் திரு ஜெக்டிப்.
கூட்டரசு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் வீடமைப்புத் திட்டங்களான ஒரே மலேசிய வீடமைப்புத் திட்டம், மக்கள் வீடமைப்புத் திட்டம் தவிர ஒரே மலேசிய அரசு ஊழியர் வீடமைப்புத் திட்டமும் இடம்பெறுவதை சாங் இயாவ் அறிவாரா இல்லையா என்றார். 2016-ஆம் ஆண்டு வரவுச்செலவுத் திட்டத்தில் பிரதமர் ஒரே மலேசிய வீடமைப்புத் திட்டத்தைப்ப் பற்றி அறிவிப்புச் செய்திருந்தும் இன்று வரை பினாங்கில் ஒரு வீடு கூட அமைக்கவில்லை என திரு ஜெக்டிப் அறிவித்தார்.
கூடிய விரைவில் சாங் இயாவ் ஒரே மலேசிய அரசு ஊழியர் வீடமைப்புத் திட்டம் குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். ஏனெனில், பிரதமர் வரவுச்செலவு அறிக்கையில் அரசு ஊழியர்களுக்காக 100,000 யூனிட் வீடுகள் கட்டப்படும் என தெரிவித்தார்.