செத்தியா ஸ்பைஸ் மாநாட்டு மைய மேம்பாட்டுத் திட்டம் விரைவில் நிறைவுப்பெறும்

பிரமாண்டமாக காட்சியளிக்கும் செத்தியா ஸ்பைஸ் மாநாட்டு மையம்

பினாங்கில் பிரமாண்டமாக நிர்மாணித்து வரும் செத்தியா ஸ்பைஸ் மாநாடு மையம் வருகின்ற மார்ச் மாதம் நிறைவுப்பெறும் என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நேரடியாக மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்ட போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரிம350மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த மாநாட்டு மையம் உலக தரம் மற்றும் மாநில கலை வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டு மையம் ஆசியாவிலே மிகப் பெரிய மாநாட்டு மையம், உலகத்திலே சூரிய சக்தியில் இயங்கும் முதல் மாநாட்டு மையம், பசுமை அங்கீகாரம் பெற்றுள்ளது, மேற்தள கூரை நகர்ப்புற பாணியில் கட்டப்பட்டது, குழந்தைகளுக்கான விளையாட்டு மையம், என அனைத்து அம்சங்களும் உள்ளடக்கி தனித்துவம் பெற்றுள்ளது.