ஜாலான் மஸ்ஜிட் நெகிரியின் உடினி வட்டம் மற்றும் ஜாலான் டெலிமா சாலை மேம்பாட்டுத் திட்டம் துவங்கியது

நிகழ்வில் சிறப்புரையாற்றினார் மாநகர் தலைவர் டத்தோ பத்தாயா பிந்தி இஸ்மாயில்
நிகழ்வில் சிறப்புரையாற்றினார் மாநகர் தலைவர் டத்தோ பத்தாயா பிந்தி இஸ்மாயில்

பினாங்கு மாநகர கழகத்தின் முயற்சியில் பினாங்கு மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுக்காணும் பொருட்டு அண்மையில் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியின் உடினி வட்டம் மற்றும் ஜாலான் டெலிமா சாலை மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . இத்திட்டம் குறைந்த கால அவகாசத்தில் போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு துவங்கப்பட்டது. தினமும் 66,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜொர்ஜ்டவுன் செல்ல ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சாலையை மையமாகக் கடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஏப்ரம் மாதல் 2015-ல் இந்த சாலை விரிவாக்கப் பணி ரிம 7.3 கோடி பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் வழி போக்குவரத்து பிரச்சனையை களைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை பினாங்கு மாநகர கழகம் ஏழுசாலை விரிவாக்க மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜாலான் மஸ்ஜிட் நெகிரி, ஜாலான் ஆயிர் ஈத்தாம், ஜாலான் கோட்லிப், ஜாலான் பாகான் ஜெர்மால் ஆகிய சாலைகளை ரிம 22.6 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட உடினி வட்டம்
மேம்படுத்தப்பட்ட உடினி வட்டம்

இதனிடையே, பினாங்கு அரசும் பினாங்கு மாநகர கழகமும் இணைந்து துன் டாக்டர் லிம் சோங் இயூலிருந்து ஆயிர் ஈத்தாம் செல்லும் சாலையை பாய்பாஸ் கட்டுமான திட்டத்தின் வழி மேம்படுத்தவுள்ளது. இத்திட்டம் 2016-ஆம் ஆண்டு தொடங்கி 2019-ஆம் ஆண்டு ரிம 1.04 பில்லியன் பொருட்செலவில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார் மாநில முதல்வர் அவர்கள். திறந்த குத்தகை முறையில் ஜாலான் பாயா தெருபோங்லிருந்து தென் தெக் லீ மற்றும் புக்கிட் ஜம்புல் சாலைகளை இணைக்கும் இரட்டை வழி பாதை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி 2018-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களும் பினாங்கில் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுக்காண்பதற்கே என்பது வெள்ளிடைமலையாகும்.} else {