நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து நேதாஜி இராயர் விடுவிக்கப்பட்டார்.

Admin
வழக்கில் வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் (உடன்  ஆட்சிக்குழு உறுப்பினர்களான ஜெக்டிப் சிங் டியோ, பீ புன் போ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோபிந் சிங் மற்றும் ராம் கர்ப்பால்)
வழக்கில் வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் (உடன் ஆட்சிக்குழு உறுப்பினர்களான ஜெக்டிப் சிங் டியோ, பீ புன் போ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோபிந் சிங் மற்றும் ராம் கர்ப்பால்)

ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மீது சுமத்தப்பட்ட இரண்டு தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டுலிருந்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார். புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கர்ப்பால் சிங் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்ததால் 2014-ஆம் ஆண்டு மே மாதம் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அய்லன் கிளாட்ஸ் பகுதியில் உரையாற்றும் வேளையில் “அம்னோ சிலாகா” எனும் வார்த்தை உபயோகித்தார். இச்சொல் தேச நிந்தனைக் குற்றஞ்சாட்டு எனக் குறிப்பிட்டு பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 4(1)பி விதியின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு கடந்த 29/4/2016-ஆம் நாள் நீதிபதி ரோஸ்லான் ஹமிட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டப்பட்டவர் பயன்படுத்திய சொற்கள் நிந்தனைகுரிய சொல் என மெய்ப்பிக்க முடியவில்லை என நீதிபதி ரோஸ்லான் குறிப்பிட்டு விடுதலை செய்தார். இராயார் சார்பில் பூஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கோபிந் சிங் ஆஜராகினார். விசாரணையைக் கண்கானிக்க பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான ஜெக்டிப் சிங் டியோ, பீ புன் போ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்ப்பால் கலந்து கொண்டனர்.
இருப்பினும், 2014-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பினாங்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் “அம்னோ சிலாகா” என்று கூறியதாக ராயர் மீது சுமந்தப்பட்ட மற்றுமொரு குற்றச்சாட்டு இன்னும் நிலுவையில் உள்ளது.